Mi Electric Tooth brush தற்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது

பிரபல செல்போன் நிறுவனமான ஜியோமி இந்தியாவில் Mi Electric Toothbrush T300-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. 2018-ஆம் ஆண்டில் உலகளவில் அறிமுகமான Mi Electric Toothbrush-ன் மாற்றப்பட்ட பதிப்பாக இது வெளிவந்துள்ளது. பாரம்பரிய பல் தூரிகையை விட 10 மடங்கு திறமையாக பற்களை சுத்தம் செய்யும் ஆற்றல் உடையது. பாக்டீரியா தடுப்பில் 99 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

Mi Electric Tooth brush

இந்தியாவில் Xiaomi Electric Toothbrush T300 விலை Mi.com வலைத்தளத்தின் மூலம் கிர கிரெளட்ஃபண்டிங்கின் தள்ளுபடியுடன் ரூ.1,299-க்கு கீழ் கிடைக்கிறது. மார்ச் 10 முதல் இது இந்தியாவில் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ப்ரஸில் உள்ள USB Type-C port 5V சார்ஜர் அல்லது பவர் பேங்கைப் பயன்படுத்தி பேட்டரியை வேகமாக சார்ஜ் செய்ய உதவுகிறது. ஒருமுறை சார்ஜ் செய்தால் 25 நாட்கள் வரை பயன்படுத்தக் கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What do you think?

மாற்றங்களை கொண்டுவரவே நீதித்துறையில் பழமையான சட்டங்களை நீக்கினோம்…! பிரதமர் நரேந்திர மோடி

வீடியோ எடுத்த ரசிகர்; எச்சரித்த சமந்தா