கமல் பற்றிய ரகசியங்களை உடைத்த மைக் மோகன்..!
மைக் மோகன்:
புகழ்பெற்ற கோலிவுட் நடிகரான மைக் மோகன் 80களின் காலக்கட்டத்தில் முன்னனி நடிகராக வலம் வந்து கொண்டிருந்தார். கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த கோகிலா திரைப்படத்தில் அறிமுகமான இவர் பின் மூடுபனி திரைப்படத்தின் மூலம் அறியப்பட்டார்.
தொடர்ந்து இவர் நடிக்கும் திரைப்படங்கள் வெள்ளி விழா அல்லது 200 நாட்களுக்கு மேல் ஓட தொடங்கியது. விதி,நூறாவது நாள், ரெட்டை வால் குருவி சகாதேவன் மகாதேவன் போன்ற வெற்றிப் படங்களின் மூலம் புகழின் உச்சத்தை அடைந்தார்.
இவர் நடிக்கும் பெரும்பாலான படங்களில் மேடையில் பாடுவது போன்ற காட்சிகள் இருந்ததால் அவர் ரசிகர்களால் மைக் மோகன் என்றும் அழைக்கப்பட்டார்.
மௌன ராகம்,மெல்ல திறந்தது கதவு போன்ற ஹிட் படங்களை கொடுத்த மைக் மோகன் திடிரென சினிமாவை விட்டு விலகினார்.தற்போது பல வருடங்களுக்கு பிறகு விஜய் நடிக்கும் கோட் திரைப்படத்திலும் ஹரா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ரீ என்ரி ஆகியுள்ளார்.
இவர் ஹீரோவாக நடித்திருக்கும் ஹரா திரைப்படம் விரைவில் திரையரங்கிள் வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து சில தினங்களாகவே ஊடகங்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். சமிபத்தில் அளித்த பேட்டியில் கமல் ஹாசனை பற்றி பேசியுள்ளார்.
மோகன் பேட்டி:
அவர் அளித்த பேட்டியில் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார். அப்போது “கமல் நடிப்பில் அவர் இணைந்து நடித்த முதல் படத்தை பற்றி கூறினார்.
கோகிலா படத்தின் ஷூட்டிங் பெங்களூருவில் நடைபெற்றது. கமல்ஹாசனின் முதல் கன்னட படம் அது. என்னுடைய முதல் படமும் அதுதான். கமல் ஹாசனை கல்லூரி காலத்திலிருந்து பார்த்து ரசித்து வந்திருக்கிறேன்.
அவருடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் எனக்கு. அப்படித்தான் அப்போதும் எப்போதும் கருதினேன். அந்த சமயத்திலேயே கமல்ஹாசன் சார் ஷூட்டிங் வந்தால் 500க்கும் மேற்பட்ட பெண்கள் அவரைப் பார்க்க வந்துவிடுவார்கள்.
அந்த அளவுக்கு அவர் மிது கிரஸ் இருந்தது. மேலும் நிறைய பேர் என்னிடம் கேட்ட கேள்வி கமல் வந்தால் ஏன் எப்போதும் எழுந்துவிடுகிறிர்கள் என்று அது அவருக்கு கொடுக்கும் ரெஸ்பெக்ட். அதனால் தான் அவர் வரும்போதெல்லாம் எழுந்துவிடுகிறேன்” என்று கூறியுள்ளார்.
-பவானிகார்த்திக்