குறைந்தது தக்காளி விலை..!! உயர்ந்தது இஞ்சி விலை..!!
சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கிலோ ஒன்றுக்கு 95 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இந்த விலை கடந்த 2 நாட்களாக விற்கப்படுவதாக மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்..,
தக்காளி விலை உயர்வாக விற்பதால், நியாயவிலை கடைகளில் இன்று கிலோ 60 ரூபாய்க்கு விற்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் அறிக்கை விடுத்திருந்தார். தக்காளி விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதால், சென்னை கோயம்பேடு மார்கெட்டிற்கு வரும் தக்காளியின் அளவு குறைந்துள்ளது.
எனவே தக்காளியின் விலை ஒரே அடியாக உயர்ந்துள்ளது, நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி விலை 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் நேற்று 35 ரூபாய் குறைந்து 95 ரூபாய்க்கு விற்பனையானது.
இந்நிலையில் இன்று விலை மாற்றமின்றி ஒரு கிலோ தக்காளியின் விலை 95 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது, இருப்பினும் இஞ்சி, பூண்டு ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது, நேற்று ஒரு கிலோ இஞ்சி 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 260 ரூபாய்க்கு விற்கப்படுகிறது..