“யூனிஃபார்ம் தான் நமக்கு பஸ்பாஸ்” அரசு மேல்நிலை பள்ளிக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர் அன்பில் மகேஷ்..!!
கொடைக்கானலில் ஆய்வு செய்த இந்த நாளை வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக மாறி உள்ளது.
கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளியில் திடீரென்று ஆய்வு மேற்கொண்ட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் … ஆசிரியர்களிடம் அதிகமான சந்தேகங்களை கேளுங்கள், யூனிஃபார்ம் (iniform) தான் நமக்கு பஸ்பாஸ் என மாணவர்கள் முன் பேச்சு
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு கலந்தாய்வு கூட்டத்திற்கு தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வந்தடைந்தார். இந்நிலையில் தனியார் விடுதியில் தங்கி உள்ள அமைச்சர் திடீரென்று விடுதி அருகே இருந்த கொடைக்கானல் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சென்றார்..
அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரை வரவேற்ற நிலையில் கொடைக்கானல் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள கட்டிடங்கள் வகுப்புகள் அங்குள்ள ஆய்வரங்கங்கள் உள்ளிட்டவை களை திடீரென்று பள்ளிக்குள் சென்று வகுப்பறைகளை அமைச்சர்கள் அன்பில் மகேஷ் ஆய்வு செய்தார்
ஆய்வின் போது ஒரு சில இடங்களில் ஆசிரியர்களுக்கு உண்டான தேவைகள் குறித்து கேட்டறிந்தனர், மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்… அப்போது அவர் பேசுகையில் உங்களுடைய திறமைகளை கண்டறிந்து கனவுகளை நோக்கி பயணியுங்கள் எனவும் ஆசிரியர்களிடம் அதிகமான சந்தேகங்களை கேளுங்கள் அப்போது தான் உங்களுடைய பாடங்களை முழுமையாக அறிய முடியும் …
எந்த நிலைக்கு போனாலும் படித்து வந்த பள்ளியையும் ஆசிரியர்களையும் மறந்து விடக்கூடாது எனவும் உங்களுக்கு கற்று கொடுக்கக்கூடிய ஆசிரியர்களுக்கு என்னுடைய பள்ளி மாணவ, மாணவிகள் பல்வேறு இடங்களில் மிகப்பெரிய தொழில் அதிபர், டாக்டர் உள்ளிட்ட பணிகளுக்கு செல்வதே தங்களுடைய நல்லாசிரியர் விருதாக கருதுவதாகவும் கூறினார் …
மலைப்பகுதிகளில் அதிகதூரம் பயணம் சென்று படிக்க வரும் மாணவர்களை கண்டு மெய்சிலிர்ப்பதாகவும் தங்களுக்கு பஸ்பாஸ் வேண்டும் என்று மாணவர்கள் கேட்டிருந்த நிலையில் யூனிஃபார்ம் ( uniform ) தான் நமக்கு பஸ்பாஸ்… மேலும் பஸ்பாஸ் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் மாணவர்கள் மத்தியில் பேசினார் …
மேலும் கொடைக்கானலில் திடீரென்று ஆய்வு செய்த இந்த நாளை தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத நாளாக மாறியுள்ளது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் மெய்சிலிர்த்தார்… தொடர்ந்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் புகைப்படங்கள் எடுத்து அனைவருக்கும் ஆட்டோகிராப் செலுத்தி புத்தகங்களை வழங்கினார்… பள்ளிக்கல்வித்துறைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் முதல்வர் தொடர்ந்து செய்து வருவதாகவும் தெரிவித்தார்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..