தமிழகத்தில் 2022-2023 பள்ளி கல்வி ஆண்டுக்காக 1 முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான வழக்கமான வகுப்புகள் (ஜூன் -13) தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10,11,12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை வெளியிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் 2022-2023 பள்ளி கல்வி ஆண்டுக்காக 1 முதல் 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான வழக்கமான வகுப்புகள் (ஜூன் -13) தொடங்கப்படும். 11- ஆம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் (ஜூன் -24) தொடங்கப்பட உள்ளது.
இனி வரும் காலங்களில், ‘நான் முதல்வன்’ கவுன்சிலிங் மூலமாக 10 ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் 11 ஆம் வகுப்பில் எந்த குரூப் எடுக்கிறீர்கள்…?? உங்களது திறமை என்ன…?? என்பது குறித்து கவுன்சிலிங் வழங்க வேண்டும் என முதல்வர் அறிவுறுத்தியுள்ளதாக கூறினார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர், 10, 11, 12-ம் வகுப்பு தேர்வுகளை மொத்தம் 23 லட்சம் பேர் எழுதுகிறார்கள். வினாத்தாள் வெளியாகாமல் இருக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம்.
2 செட் வினாத்தாள் பிரிண்ட் செய்கிறோம். தேர்வு எழுதும் அன்றைய தினம் தான் எந்த ‘செட்’ வினாத்தாளை வழங்க வேண்டும் என்பதை முடிவு எடுத்து சொல்வோம். அதேபோல் மார்க் விஷயத்தில் பரீட்சை பேப்பர் திருத்தும்போது மாணவர்கள் எழுதிய விடைக்கு ஏற்ப மதிப்பெண் வழங்க வேண்டும் என்பதுதான் எங்களது நிலைப்பாடு. அதற்கேற்ப ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படும், என தெரிவித்துள்ளார்.