வைகோவின் கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் பதில்

புதுப்பிக்கத்தக்க விசை ஆக்கம் மூலமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை அடைவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளதாக, மதிமுக பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் ஆர்.கே.சிங் விளக்கமளித்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க விசை ஆக்கம் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மாநிலங்களவையில் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக, 2019-20 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் புதுப்பிக்கத்தக்க விசை ஆக்கத்திற்கான இலக்கு எவ்வளவு?, அந்த இலக்கில் ஏதேனும் பற்றாக்குறை ஏற்படுமா? அதற்கான காரணங்கள் என்ன? என வினவினார்.

மேலும், கடந்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுமையும் குறிப்பாகத் தமிழகத்தில், அரசு மேற்கொண்ட புதுப்பிக்கத்தக்க விசை ஆக்கத்திற்கான திட்டங்கள் குறித்த விவரங்களைத் தர வேண்டும் என்றும் வைகோ கேட்டிருந்தார்.

மத்திய இணை அமைச்சர்
ஆர்.கே.சிங்

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ள மத்திய இணையமைச்சர் ஆர்.கே.சிங், பருவநிலை மாற்றம் குறித்த பாரிஸ் உடன்படிக்கையின்படி தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட ஒரு இலக்கை அடைவதில், மத்திய அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்தார்.

அதன்படி 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் எரிபொருள் பயன்பாட்டில், புதைபடிவ எரிபொருள்களை 40 விழுக்காடு குறைக்கவும், மாற்றாக புதிய விசையாக்க வழிகளைக் கையாளவும் இலக்கு குறிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய இணை அமைச்சர் விளக்கமளித்தார்.

அந்த இலக்கை எட்டுவதற்கு 2022 ஆம் ஆண்டுக்குள் 175 ஜிகாவாட் புதுப்பித்தக்க விசையாக்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக வைகோவின் கேள்விக்கு பதில் அளித்துள்ளார். கதிர்மின்விசை மூலம் 100 ஜிகாவாட், காற்றில் இருந்து 60 ஜிகாவாட், உயிரி எரிபொருள் 10 ஜிகாவாட், 5 ஜிகாவாட் சிறிய அளவிலான நீர்மின் திட்டங்களின் வழியாகப் பெறுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த இலக்கை அடைவதில் மத்திய அரசு உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ள அவர், 2016 ஏப்ரல் முதல் 2020 ஜனவரி 31 வரை தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் 86.32 ஜிகாவாட் மின்விசை கூடுதலாக உருவாக்கப்பட்டிருப்பதாகவும் அவர் விளக்கமளித்துள்ளார்.

What do you think?

‘தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு’ 2 பெண்கள் தற்கொலை முயற்சி!

‘செம ஸ்டைலாக காட்டுக்குள் சாகசம் செய்யும் ரஜினிகாந்த்’ வைரலாகும் Promo வீடியோ