பெரியார் மட்டும் ஈரோட்டில் இருந்திருந்தால் உதயநிதியை கட்டி அணைத்து உச்சி முகர்ந்திருப்பார் என அமைச்சர் எ.வ வேலு பேசியுள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று பதில் உரையின் போது பேசிய பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வவேலு ; கடந்த சட்டமன்றத் தேர்தலில் ஒற்றை கல்லை காட்டி திமுகவுக்கு வெற்றி தேடி தந்த உதயநிதி , ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதுரையில் நிலைநாட்டப்பட உள்ள கலைஞர் நூலகம் என்கிற படத்தைக் வெற்றி கொடி நாட்டி பெருமை சேர்த்ததாக கூறினார்.
திராவிட மாடல் ஆட்சியை பற்றி, பெரியாரின் கொள்கையை பற்றி, இளைஞர்களை ஈர்க்கின்ற வகையில் தமிழர்களின் உள்ளமெல்லாம் கவருகின்ற வகையில் பெரியாருடைய கொள்கைகளை எல்லாம் ஒவ்வொரு கிராம பகுதிக்கும் எடுத்து சென்றதாகவும், பொழுது பெரியார் மட்டும் ஈரோட்டில் இருந்திருந்தால் என் கொள்கைகளை நாடு முழுவதும் பரப்புகின்ற என் கொள்ளு பேரன் உதயநிதியே என கட்டி அனைத்து உச்சி முகர்ந்து இருப்பார் எனக் கூறிய போது அவையில் திமுக மற்றும் கூட்டணி கட்சி உறுப்பினர்கள் மேசையை தட்டி வரவேற்றனர்.