“ஆம்பளையா இருக்கிறவன் கல்யாணம் பண்ணிக்கிறான்” பிஜேபிக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் துரைமுருகன்..!!!
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் திமுக சார்பில் நடக்க இருக்கும் பாராளுமன்றத் தேர்தலுக்காக கட்சி அலுவலகத்தை நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். பின்னர் பேசிய போது பொதுப்பணித்துறையில் அமைச்சராக இருந்த போது குடியாத்தத்தில் சுற்றுலா மாளிகை கட்டினேன்
ஆனால் பல எம்எல்ஏக்கள் அதனை வீடாக பயன்படுத்தினார்கள். அதே போன்று குடியாத்தத்தில் நீதிமன்றம் ஒன்று இல்லை என்று கேட்டதற்கு விதிகளை மீறி ஏரியில் நீதிமன்றம் கட்டிக் கொடுத்தேன். அதனால் இன்று வரை எனக்கு உயர் நீதிமன்றத்தில் இருந்து நோட்டீஸ் வந்து கொண்டே இருக்கிறது.
இதனை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தபோது பத்திரிகையாளர்களை சற்று ஓரமாக வரும்படியும்நீங்கள் என்ன நான் பேசுவது அனைத்தும் போடப் போகிறீர்கள் என்று சும்மா துரைமுருகன் பேசினார் என்று போடுவீர்களஎன்று கிண்டலாக பேசினார்.
13 ஆண்டுகளாக காட்பாடி தொகுதியில் நின்று வெற்றி பெற்று வருகிறேன். ஏனென்றால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறேன். ஓட்டு கேட்க செல்லும் போது கொடுக்கும் வாக்குறுதிகளை நோட்டில் குறித்து வைத்துக் கொண்டு மீண்டும் அந்த பகுதிக்கு செல்லும்போது எத்தனை வாக்குறுதிகள் கொடுத்திருக்கிறேன்.
அதில் எத்தனை நிறைவேற்றி இருக்கிறேன் மீதி நிறைவேற்றித் தருகிறேன் என்று கூறி நிறைவேற்றுவதால் தான் தொடர்ந்து காட்பாடி தொகுதியில் வெற்றி பெற்று வருகிறேன்.
12 ஆண்டுகளாக வா ஒரே தொகுதியில் நின்று ஜெயித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று ஆச்சரியத்துடன் என்னை பார்த்து மோடி கேட்டதாக துரைமுருகன் தெரிவித்தார்.
ஒரு நாள் துரைமுருகனைப் பார்த்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உன்னால் முடியாது சென்னையில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று விடு என்று சொல்லியதற்கு அண்ணே நான் போனால் வாங்கள் என்று எழுந்து நிற்கும் எங்கள் ஊரு சென்னை எனக்கு ஒத்து வராது என்றேன்.
மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கி போய்க் கொண்டிருக்கிறது இந்தியா இந்த நாட்டிலே ஜனநாயகத்தை தொண்டையை நெறிக்கின்ற வேலையை மத்திய அரசு செய்து கொண்டிருக்கிறதுஇன்னொரு பக்கம் சிறுபான்மையினரின் உயிரை எடுப்பதற்க்கான சட்டங்களை ஒரு பக்கம் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறது.
இந்த நாட்டில் ஒரே கட்சி, ஒரே நாடு, ஒரே தேர்தல் ஒரே கட்சி அது பிஜேபி தான் என்று கொண்டு வர வேண்டும் என்று வடகொரியாவில் நடப்பதை போல் ஒரு ஆட்சியை நடத்த வேண்டும் என்று கருதுகின்றார்கள்.மீண்டும் நான் ஆட்சிக்கு வந்தவுடன் திமுக வையும் இந்த கூட்டணியும் தொலைத்து விடுவேன் என்று ஒரு மாபெரும் தலைவர் இதுபோன்ற வார்த்தைகளை கூறுவார்களா என துரைமுருகன் தெரிவித்தார்.
வாரிசு அரசியல் நடத்துவதாகவும் கூறுகிறார்கள் “ஆம்பளையா இருக்கிறவன் திருமணம் செய்து கொள்கிறான்.., ஆண்மையாக இருக்கிறவன் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கிறான்” என்றும் நகைச்சுவையாக பேசினார்.
பின்னர் அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது எங்களுடைய வேட்பாளரை ( கதிர் ஆனந்தை ) எப்படியாவது கைது செய்து விட வேண்டும் என ஒரு செல்வாக்கு மிக்க வேட்பாளர் மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து வருகிறார். இது குறித்து மேலிடத்திலிருந்து எங்களுக்கு தகவல் வந்துள்ளதுஇதைப் பற்றி நாங்கள் கவலைப்படவில்லை என்றார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..