அண்ணாமலையை கிழித்து எடுத்த அமைச்சர் துரைமுருகன்..!!
காவிரி பிரச்சனையில் தமிழ்நாடு அரசு நாடகம் நடத்தி வருகிறது.., என பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். அதற்கு திமுக பொதுச்செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான துரைமுருகன் கிண்டலாக பதிலடி கொடுத்துள்ளார்..
கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்து விடுவது குறித்து தான் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.. டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நடைபெற இருக்கும் நிலையில், திடீரென காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவு அதிரித்துள்ளது
அதே சமையம் கர்நாடகாவில் இருந்து தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டு நீர் கூட கொடுக்ககூடாது என கர்நாடக விவசாயிகள் தொடர்ந்து 36 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..
தமிழ்நாட்டிலும் காவிரி டெல்டா மாவட்டங்களிலும் தமிழ்நாட்டிற்கான உரிய காவிரி நீரை திறந்து விட வேண்டி முழு அமைப்பும் போராட்டம் நடத்தி வருகிறது, இதனால் டெல்டா மாவட்டங்களில் ஒரு லட்சம் கடைகள் இன்று மூடப்பட்டுள்ளன..
இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் துரைமுருகன்.., வினாடிக்கு 3௦௦௦ கனஅடி நீரை முழுமையாக கர்நாடக திறந்து வைத்திருந்தால் 4.15 நீர் நமக்கு கிடைத்திருக்கும்.., ஆனால் இதுவரை 3.15 டிஎம்சி நீர் மட்டுமே கிடைத்துள்ளது.
பின் செய்தியாளர் ஒருவர் திமுக அரசு நாடகமாக ஆடுகிறது என பாஜக மாநில தலைவர் “அண்ணாமலை” ட்விட்டர் எக்ஸ் இணையதளம் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார், இதுபற்றி உங்கள் கருத்து என்ன என்ற கேள்விக்கு..,
திமுக நாடகம் ஆடுவதாகவே இருக்கட்டும், இந்த நாடகத்தை நிறுத்துவதற்கு நீங்கள் பிரதமரிடம் சொல்லி தண்ணீர் திறந்து விட வலியுறுத்தலாமே, போராட்டம் செய்யும் விவசாயிகளிடம்.., விவசாயம் முக்கியமாக நினைத்தால் தமிழ்நாட்டு விவசாயிகளை நினைத்து தண்ணீர் திறந்து விட சொல்லி கேட்கலாமே இதன் ஏன் இன்னும் பாஜக செய்யாம இருக்கு என அண்ணாமலையை விளாசியுள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..