கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திருப்பது “கின்னஸ்சில்” இடம் பெறக்கூடிய ஒன்று அமைச்சர் துரைமுருகன் பெருமிதம்…!!
இரண்டு ஆண்டுகளில் ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்திருப்பது “கின்னஸ்சில்” இடம் பெறக்கூடிய சாதனை என அமைச்சர் துரைமுருகன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவான்மியூர் அருள்மிகு மருந்தீஸ்வரர் திருமண மண்டபத்தில் சென்னை மாவட்ட திருக்கோயில்கள் சார்பில் 20 ஜோடிகளுக்கு திருமண விழா நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் அமைச்சர்கள், துரைமுருகன், மா. சுப்பிரமணியன், சேகர் பாபு, மேயர் பிரியா, சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு திருமண மணமக்களை வாழ்த்தினர்.
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திருமாங்கல்யத்தை எடுத்துக் கொடுத்து இணையர்களுக்கான திருமண நிகழ்வினை தொடங்கி வைத்தார்.
திருமண விழாவில் பேசிய அமைச்சர் துரைமுருகன், அறநிலையத்துறைக்கு அமைச்சராக சேகர்பாபு வந்த பிறகு ஒரு சிறப்பு கௌரவம் அறநிலையத்துறைக்கு கிடைத்துள்ளதாக கூறினார்.
பின்னர் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியம், 5 ஆயிரம் கோடி மதிப்பிலான கோவில் நில சொத்துக்கள் மீட்கப்பட்டு அரசிடம் ஒப்படைக்கப்படுள்ளதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சி நிறைவாக இந்து சமய அறநிலை துறை சார்பில் மணமக்களுக்கு சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..