தமிழகத்தில் ரயில்வே கடவுபாதைகளுக்கு 48 ரயில்வே மேம்பாலகள் அமைத்து வருவதாக எ.வ.வேலு தெரிவிப்பு…
தமிழகத்தில் ரயில்வே கடவுபாதைகளுக்கு 48 ரயில்வே மேம்பாலங்களை அமைத்து வருவதாக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
வேலூரில் உள்ள சுற்றுலா மளிகை புதியதாக 7.63 கோடி மதீப்பீட்டில் கட்டப்பட்டது. இதனை தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். உடன் தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ. வ.வேலு, மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி மற்றும் மேயர் சுஜாதா சட்டமன்ற உறுப்பினர்கள் கார்த்திகேயன், நந்தகுமார் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பின்னர் பாலாற்றின் குறுக்கே சத்துவாச்சாரி -காங்கேயநல்லூர் மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல்நாட்டு விழாவில் அமைச்சர் துரைமுருகன் மற்றும் ஏ,வ.வேலு கலந்துகொண்டனர்.