முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கேள்விக்கு நக்கலாக பதிலளித்த அமைச்சர் துரைமுருகன்..!!
தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது. சட்டப்பேரவை தொடங்கியவுடன் நடைபெற்று வரும் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.
இந்த நிலையில் மதுரை சட்டப்பேரவை உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ, “முந்தைய ஆட்சியில் ஆயிரத்து 296 கோடியில் முல்லைப் பெரியாறு அணையில் இருந்து மதுரைக்கு தடையின்றி குடிநீர் கிடைக்கும் திட்டம் கொண்டு வரப்பட்டதாகவும், ஆமை வேகத்தில் நடைபெறும் அந்தப் பணியை விரைவுபடுத்த வேண்டும் என கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, “இந்த திட்டத்தை தொடங்கிவிட்டு முந்தைய ஆட்சியில் கிணறு தோண்டுவதற்கான அனுமதியை வனத்துறையிடம் வாங்காமல் இருந்ததாகவும், தற்போது அனுமதி பெற்று பணிகளை தொடங்கியுள்ளதாக கூறினார்.
இதற்கிடையே இருக்கையில் இருந்து எழுந்த அமைச்சர் துரைமுருகன், “தண்ணீர் நிச்சயமாக கொடுப்போம் என்றும்,
அந்த தண்ணீர் காலியாக இருக்க அணையில் தெர்மாகோல் போட்டு மூடிவைத்துள்ளோம்.” என கிண்டலாக பதிலளித்தார்.
அமைச்சரின் பதில், பேரவைத் தலைவர் அப்பாவு உள்பட பேரவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களிடையே சிரிப்பலையை ஏற்படுத்தியது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..