அமைச்சர் சாமு நாசர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக டிஆர்பி ராஜா அமைச்சராக வரும் 11ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார்.
திமுக அரசு பதவியேற்றதில் இருந்தே மூத்த அமைச்சர்கள் பொதுவெளியில் பேசுவதும், நடந்து கொள்வது சோசியல் மீடியாவில் சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களை கிளப்பி வருகிறது.
இந்நிலையில் கடந்த மே 2ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் பொது இடங்களில் பார்த்து பேசும் படி எச்சரித்ததாக தகவல்கள் வெளியாகின.
அமைச்சரவையில் சரிவர செயல்படாத அமைச்சர்களுக்கு இலாகா மாற்றம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. குறைந்த செயல்பாடுகளை உடைய அமைச்சர்களுக்கு மாற்றாக புதிய சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சரவை பொறுப்புகள் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகின. குறிப்பாக அமைச்சரவையில் புது முகமாக டிஆர்பி ராஜா சேர்க்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியானது.
தற்போது தமிழ்நாடு அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டதாக ஆளுநர் மாளிகை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. திமுக அமைச்சரவையில் இருந்து மூத்த அமைச்சரான நாசர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப்பதிலாக பால்வளத்துறை அமைச்சராக டிஆர்பி ராஜா வரும் 11ம் தேதி பதவியேற்க உள்ளார்.