அமைச்சர் ஐ.பெரியசாமி வழக்கு உச்சநீதிமன்றம் சொன்னது..!!
உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஏப்ரல் 8-ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதி மன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
வீட்டு வசதி வாரியத்திற்கு சொந்தமான வீட்டை முறைகேடாக ஒதுக்கியதாக ஐ.பெரியசாமி மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் ஐ.பெரியசாமி, எம்.பி., எம்எல்ஏ-களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
மனுவை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் அமைச்சர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரங்கள் இல்லை எனக்கூறி கடந்த ஆண்டு மார்ச் மாதம் விடுவித்தது.
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமைச்சர் ஐ. பெரியசாமிக்கு எதிரான வீட்டு வசதி வாரிய முறைகேடு வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டார்.
இந்நிலையில், உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை ஏப்ரல் 8-ஆம் தேதி விசாரிக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..