டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் போதுமான அளவு கையிருப்பு உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை அடையார் புற்றுநோய் மருத்துமனையில் ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் பார்வையாளர்கள் தங்குமிடம் கட்டடம் கட்டுவதற்கான இடம் தேர்வு மற்றும் ஆய்வினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்,
புற்று நோய்க்கான மருத்துவ சேவையாற்றி வரும் அடையார் புற்றுநோய் மருத்துவமனை.இங்கு சிகிச்சை பெற வருபவர்கள் தங்க வசதியாக தங்குமிடம் ஒன்று வேண்டும் என்ற வகையில் 1,60,000 பேர் ஓராண்டுக்கு புற்றுநோய்க்கு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். புதிதாக பலர் சிகிச்சைக்காக வந்து கொண்டிருக்கிறார்கள் இவர்களுக்கு ஏற்கனவே வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தித் தர சைதை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி என்பதால் தொகுதி மேம்பாட்டு நிதியில் கோரிக்கையை ஏற்று மருத்துவமனையின் மருத்துவர் ஹேமந்த் ராஜ், கல்பனா உள்ளிட்டோர் ஆய்வு செய்து ஒன்றரை கோடி செலவில் புதிய தங்குமிடம் அமைக்க முடிவு செய்து உள்ளோம்.
2023 – 24 ஆம் ஆண்டு தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொள்ளப்படும். 13 ஆவது மண்டலத்தை சேர்ந்தவர்கள் இது குறித்து பணிகளை பார்த்துக் கொள்வார்கள். முதற்கட்டமாக ஒன்றரை கோடி வழங்கப்பட உள்ளது, மேலும் தேவைப்பட்டால் அடுத்த ஆண்டு நிதியில் வழங்கப்படும், குளியலறை, கழிப்பறை வசதியுடன் கட்டப்பட உள்ளது. மிக விரைவில் பணி தொடங்க உள்ளது.
முதலமைச்சர் காப்பீடு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துகிற மருத்துவமனையாக அடையார் புற்றுநோய் மருத்துவமனை இருந்து வருகிறது. மதுரவாயலில் 4 வயது சிறுவன் டெங்கு பாதிப்பால் உயிரிழந்து உள்ளார். தனியார் மருத்துவமனையில் காய்ச்சல் குறையாததால் எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது.
ஒரு வாரம் சிகிச்சை பெற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்து உள்ளார்.மிகவும் வேதனையாக உள்ளது. உலகம் முழுவதும் மழைக்காலங்களில் டெங்கு பாதிப்பு இருக்கும். கடந்த ஆண்டுகளில் டெங்கு மலேரியா போன்ற பாதிப்புகளில் இருந்து மக்களை காக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
இதன் விளைவாக கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இந்த ஆண்டும் பாதிப்பு கட்டுக்குள் தான் உள்ளது. நேற்று வரை 253 பேர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை ஜனவரி ஒன்றாம் தேதி முதல் இன்று வரை 3 பேர் டெங்கு பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
2,12,121 பேருக்கு இந்த ஆண்டு மாதிரிகள் எடுத்து பரிசோதிக்கப்பட்டது. கொசு மருந்து தெளிக்கும் பணியாளர்கள் தொடர் பணியில் உள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 16,005 மருந்து தெளிக்கும் இயந்திரங்கள் உள்ளது.21,695 பேர் கொசு ஒழிப்பு பணியில் ஈடுப்பட்டு உள்ளனர். நேற்று முன்தினம் 11 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டது. டெங்கு பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள் போதுமான அளவு கையிருப்பு உள்ளது. டயரியா பாதிப்பு சென்னையில் இல்லை.
மதுரவாயல் குழந்தை உயிரிழந்த பின்னர் மாநகராட்சி ஆணையரிடம் டெங்கு பாதிப்பு மற்றும் கொசு ஒழிப்பு குறித்து கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் இடம் தெரிவித்துள்ளோம். டெங்கு பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வருவது தொடர்பாக நாளை தலைமைச் செயலாளர் தலைமையில் உயர்மட்ட குழு ஆலோசனை நடைபெற உள்ளது. திருப்பணித்துறை சார்ந்த அதிகாரிகளும் மருத்துவத்துறை சார்ந்த அதிகாரிகளும் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.
வரும் சனிக்கிழமை 16 ஆம் தேதி ஓமந்தூரார் வளாகத்தில் மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட அளவிலான ஒட்டு மொத்த மருத்துவத் துறை அலுவலர்கள் கலந்து கொள்ளும் கூட்டம் அமைச்சர் மா சுப்பிரமணியன் தலைமையில் ஆலோனை கூட்டம் நடைபெற உள்ளது. துணை சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் முறையாக பணி செய்து வருகின்றனர். 1.70 கோடி நபர்களுக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத மருத்துவ இட ஒதுக்கீடு கிடைக்க முதலமைச்சர்தான் காரணம் , புதுச்சேரியைப் போல் 10 சதவீதமாக அதை உயர்த்த வரும் ஆண்டில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். டெங்கு பதிப்பு பற்றி பெரிய அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தேவையற்ற பொருட்களில் தேங்கி இருக்கும் தண்ணீரை சுத்தம் செய்ய வேண்டும் பயிர்கள் தேங்காய் சிரட்டைகள் உள்ளிட்டவை தேக்கி வைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நகர சுகாதார அலுவலர்களும் கட்டிடங்களில் தண்ணீர் தேங்குவது மற்றும் அதனை அகற்றுவது குறித்து அறிவுறுத்தல் வழங்கப்படும், தேவைப்பட்டால் அபராதமும் விதிக்கப்படும். பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு மிகக் குறைந்த அளவில்தான் தமிழகத்தில் உள்ளது. வீடுகளில் பிரசவம் பார்ப்பதை உறுதியாக தவிர்க்க வேண்டும். 8713 துணை சுகாதார நிலையங்கள் தமிழகத்தில் உள்ளது. அவர்களின் பணி கிராமங்களில் கருவுற்றிருக்கும் தாய்மார்களின் உடல்நிலை உடல் எடை உள்ளிட்டவற்றை குறித்து கவனிக்க வேண்டியதுதான். அதனை முறையாக கவனிக்காத அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
அண்ணாமலை சமூக வலைதள பதிவு குறித்து பதில் அளித்த அமைச்சர்,
அதில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு வழங்கப்படும் ஊட்டச்சத்து பெட்டகம் தனியார் கம்பெனிக்கு கொடுக்கப்படுகிறது அது, தடை செய்யப்பட்ட கம்பெனிக்கு வழங்கப்படுகிறது என்று சொன்னார். பிளாக் லிஸ்ட் செய்யப்பட்ட கம்பெனிக்கு கான்ட்ராக்ட் கொடுத்ததாக சொல்கிறார். இந்தத் திட்டம் தொடங்கியதில் இருந்து அதிமுக அரசு அந்த கம்பெனிக்கு தான் டெண்டர் கொடுத்து வந்தனர்.
இந்த அரசு வந்ததும் ஏன் கேட்கிறார்கள் என்றார்?
அவர் குறிப்பிடும் கம்பெனி பிளாக் லிஸ்ட் இல்லை அப்படி இருந்திருந்தால் டென்டரில் கலந்து கொள்ள முடியாது. நான் உறுதியாக சொல்கிறேன், அவர் சொல்லும் கம்பெனி பிளாக் லிஸ்ட்ல் இல்லை. ஆவின் -ல் ஹெல்த் மிக்ஸ் தயார் செய்ய வையுங்கள் அதில் வாங்கிக் கொள்ளலாம் என்றார்.