போலி மருத்துவர்கள் ரொம்ப காலமாக இருந்து வந்தாலும் இந்த ஆட்சியில் தான் முறையாக கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளார்கள்.
அந்த வகையில் தான் கடந்த வாரம் கூட ஒரே நாளில் 73 பேர் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள் அமைச்சர் மா.சுப்பிரமணியம் பேட்டி
மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
சுற்றுலா தளங்கள் மற்றும் மதுரை சித்திரைத் திருவிழாவிற்கான நடவடிக்கை குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், வழக்கமான விதிமுறைகளை கடைபிடித்தால் போதும். தற்போது பரவி வருவது வீரியம் இல்லாத வைரஸ், பெரிய அளவிலான பாதிப்பு ஏற்படுத்தவில்லை. இந்திய அளவில் 11 ஆயிரம் எண்ணிக்கை வந்தாலும் கூட தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 500 வரை சென்று தற்போது குறைய தொடங்கியுள்ளது.
சமீபத்தில் போலி மருத்துவர்கள் அதிகம் பிடிபடுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த, போலி மருத்துவர்கள் தற்போது முறையாக கண்டுபிடிக்கப்பட்டு வருகிறார்கள். ரொம்ப காலமாக இருந்து வந்தாலும் இந்த ஆட்சியில் தான் முறையாக கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள்தான் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளார்கள். அந்த வகையில் தான் கடந்த வாரம் கூட ஒரே நாளில் 73 பேர் அளவிற்கு கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
உக்ரை மாணவர்கள் மருத்துவப் படிப்பு தொடர்வது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ஒன்றிய அரசு அதற்கான விதிமுறைகளை சமீபத்தில் வகுத்துள்ளது. தமிழ்நாடு அரசு தொடர்ந்து கோரிக்கைகளை ஒன்றிய அரசிடம் வைத்துள்ளது எனக்கூறிய அமைச்சர், திருமங்கலத்தில் உள்ள தமிழகத்தின் ஒரே ஹோமியோபதி கல்லூரி கட்டிடங்கள் சேதம் அடைந்திருப்பது மற்றும் புதிய மருத்துவ கல்லூரிகள் கட்டுவது குறித்த கேள்விக்கு வேறு இடத்தில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுவரை விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அந்த மாணவர்கள் படிப்பதற்காக பரிசீலித்து வருகிறோம். முதலில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் வந்துவிட்டால் புதிய ஹோமியோபதி கல்லூரிகள் துவங்குவது பற்றி யோசிக்கலாம் என்றார்.