கீரை வகைகளை உண்ணுங்கள் என அமைச்சர் பொன்முடி கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைகழகத்தில், தேசிய மருத்துவ தாவர வாரியம் சார்பில் மருத்துவ தாவரங்களின் முக்கியத்துவம் மற்றும் கல்விசார் அமைப்புகளில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த இரண்டு நாள் தேசிய கருத்தரங்கை தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வைத்தார்.
பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் பொன்முடி,
உண்மையிலே இது மிக சிறப்பான நிகழ்ச்சி. படிக்கும் போதே மாணவர்களுக்கு இயற்கை மற்றும் தாவரங்கள் மீது உள்ளபற்றை அதிகரிக்க வேண்டும் என்னும் நோக்கில் இந்த கருத்தரங்கு நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது எனவும், இது மருத்துவத்துறை மாணவர்கள், தாவிரயல் மாணவர்களுக்கு மட்டும் அல்ல அனைத்து அடித்தள மாணவர்களுக்கும் சென்று சேர வேண்டிய ஒன்று. தற்போது, மூலிகைகள் எல்லாம் அழிந்து போய் கொண்டு உள்ளது .
நான் படிக்கும் போது எங்கள் ஊரில் அனைத்து வீடுகளிலும் தோட்டம் இருக்கும். கீரைகளை அங்கே வளர்ப்பார்கள். அது தான் சாப்பாடு மட்டன், சிக்கன் என்று இப்போது உள்ள இளைஞர்கள் சாப்பிடுகின்றனர். அதை சாப்பிடுங்கள் ஆனால் கீரை வகைகளையும் உண்ண வேண்டும் என்றும் மாணவர்களுக்கு வலியுறுத்தினார்.
யோகா, யூனானி என்பது அனைத்தும் மருத்துவம் தான். மக்களை தேடி மருத்துவ திட்டத்தை மிக சிறப்பாக உருவாக்கி கலைஞர் வழியில் முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டு வருவதாகவும், நாம் எவ்வளவு வளர்ந்தாலும் கீரை, பழ வகைகளை நாம் சேர்த்து கொள்ள வேண்டும். அது தான் இயற்கை மருத்துவம். எல்லா பள்ளிகலும் கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் தோட்டங்கள், மரங்கள் நட வேண்டும் என்று உத்தரவிட்ட முதல்வர் தான் நம் முதல்வர் முக ஸ்டாலின் எனவும், நெடுஞ்சாலைகளில் சாலை போடுவதற்காக மரங்கள் வெட்டபட்டாலும் அதை திரும்ப நட வேண்டும் என்றும் நம் முதல்வர் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.
நான் படிக்கும் காலங்களில் கல்லூரிகளில் ஆங்கில வழி கல்வி தான் இருந்தது. ஆங்கிலத்தில் பேசும்போது சரிவர புரிவதில்லை. ஆனால் தாய் மொழியில் பேசும்போது தெளிவாக பேச முடியும், ஒழுங்காக புரியும். கல்லூரிகளில் கலை பாடங்களில் தமிழ் வழியை கொண்டு வந்தவர் அண்ணா, கலைஞர் அறிவியல் பாடங்களில் தமிழ் வழியில் படிக்கலாம் என்று கொண்டு வந்தார். தமிழ்வழியில் படிப்போருக்கு உதவி தொகை வழங்கியது கலைஞர் தான். இரு மொழி கொள்கை என்பது மிக மிக முக்கியம். கல்வி வளர்ச்சியோடு இயற்கை மற்றும் தாவர மீதான பற்று வளர்ச்சி வேண்டும். படிப்பு புத்தகத்தை படிப்பது மட்டுமல்ல பொது அறிவை வளர்த்து கொள்ள வேண்டும் எனவும்
இல்லம் தேடி கல்வி, மக்களை தேடி மருத்துவம் என்பது போன்ற பல்வேறு திட்டங்களில் வளர்ச்சி தான் திராவிட மாடல் அரசு தான். மாத்திரைகள் அநேகம் சாப்பிடுகிறோம். அதனால் பல பக்க விளைவுகள் ஏற்படுகிறது. ஆனால், மூலிகைகள் பயன்பாடு அனைத்து வியாதிகளையும் சரி செய்கிறதாக தெரிவித்தார்.
வீடுகளில் மாணவர்கள், ஆசிரியர்களை மூலிகை தாவரங்களை வீடுகளில் வளர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்திய அவர், தமிழ்நாட்டில் சித்த மருத்துவ பல்கலைகழகம் உருவாக்க பல்வேறு முயற்சிகளை தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொண்டு ஒப்புதலுக்காக நிற்க வேண்டிய இடத்தில் நின்று வருகிறோம். தமிழக சித்தா பல்கலைக்கழகத்திற்கு ஆளுநர் ஒப்புதல் தராமல் நீண்ட நாட்களாக கிடப்பில் வைத்திருப்பது வருத்தமளிக்கிறது என்றார்.