திரௌபதி படத்தை பாராட்டிய தமிழக அமைச்சர்!

திரௌபதி படத்தை பார்த்து விட்டு அமைச்சர் ராஜேந்திரா பாலாஜி டிவிட்டரில் வாழ்த்தியுள்ளார்.

டிரெய்லர் வெளியானது முதல் தற்போதுவரை பரபரப்பை ஏற்படுத்தி வரும் திரைப்படம் திரௌபதி. கடந்த மாதம் 28ம் தேதி வெளியான இப்படத்திற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் இந்த படம் ஒரு சமுதாயத்திற்கு எதிராக பொய்யான கருத்துகளை கூறுவதாகவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

இந்த படத்தை பாமக நிறுவனர் ராமதாஸ், பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் ஹெச். ராஜா ஆகியோர் பாராட்டினர். அந்தவகையில் தற்போது பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் இந்த படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் டிவிட்டர் பக்கத்தில் கூறுகையில், “இன்று திரெளபதி படம் பார்த்தேன்.பெண் பிள்ளைகளுக்கும் பெற்றோர்களுக்கும் நல்லதொரு விழிப்புணர்வு திரைப்படமாக அமைந்துள்ளது.இயக்குநருக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகள்” என்று தெரிவித்துள்ளார்.

What do you think?

சூர்யா- வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் ‘வாடிவாசல்’ படத்தின் கதை இதுவா?

‘அதிரடியாக குறைந்த தங்கத்தின் விலை’ பொதுமக்கள் மகிழ்ச்சி!