” பக்தர்களின் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றி பக்தர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் ஆன்மிக ஆட்சியாக , முதலமைச்சர் தலைமையிலான ஆட்சி உள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்”
சென்னை புரசைவாக்கம் கங்காதரேசுவரர் திருக்கோயிலுக்கு தங்கத் தேருக்கான மரத்தேர் உட்பட இரண்டு மரத்தேர்களை தயார் செய்யும் பணியை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.
மரத்தேர்கள் தயார் செய்யும் பணியை தொடங்கி வைத்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு, 10 கோடி மதிப்பீட்டில் கங்காதரேசுவரர் கோயிலில் நடைபெற்று வரும் திருப்பணிகள் நிறைவடைந்து அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று தெரிவித்தார் .
ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்தி திருப்பணி மேற்கொள்ளப்படுகிறது . தமிழகம் முழுவதும் 51 புதிய மர , வெள்ளி , தங்க திருத்தேர்கள் 31 கோடியில செய்யப்பட்டு வருகின்றன. பழுதடைந்த 13 மரத்தேர்களுக்கு 4.12 கோடியில் திருப்பணி மேற்கொள்ளப்படுகிறது.
திமுக ஆட்சி அமைந்த பிறகு புரசைவாக்கம் கங்காதரேசுவரர் கோயில் உட்பட 3 கோயிலுக்கு தங்கத் தேர் செய்யப்படும் என்று அறிவித்தோம். இந்த கோயிலுக்காக 20 அடி உயரத்தில் புதிய மரத்தேர் செய்யப்படுகிறது.
5 கோயில்களில் வெள்ளித் திருத்தேர் செய்யும் பணி அறிவிக்கப்பட்டு திருத்தணி கோயிலில் பணி நிறைவடைந்துள்ளது. ராமேஸ்வரம் , சமயபுரம் கோயிலில் பல ஆண்டுகளுக்கு பிறகு , திமுக அரசு அமைந்த பிறகு திருத்தேர்கள் ஓடத்தொடங்கியுள்ளன.
ஆன்மிக ஆட்சியில் , அனைத்து பக்தர்களின் கோரிக்கையும் நிறைவேற்றி பக்தர்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் ஆட்சியாக உள்ளது. இக்கோயிலில் 10 கோடியில் திருப்பணி நடக்கிறது . 6 கோடி இரு மரத் தேர்களுக்கும , 4 கோடியில் கோயிலின் பிற திருப்பணிகளும் நடைபெறுகிறது.
அடுத்த ஆண்டு மார்ச் , ஏப்ரல் மாதத்தில் குடமுழுக்கு நடைபெறும். பருவமழை நெருங்கியுள்ளதால் கோயில் குளங்கள் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. மழை நீரை தேக்கும் வகையில் கோயில் குளங்கள் தூய்மைப்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் இதற்காக சுற்றறிக்கை அனுப்பி கோயில் குளங்களை
தூர்வாரி , சுத்தப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என்று கூறினார்.