‘யாரும் வராதீங்க’ கொரோனாவால் வீட்டின் முன்பு போர்டு வைத்த செங்கோட்டையன்

அமைச்சர் செங்கோட்டையன் தனது வீட்டின் கேட்டில் தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம் என்று போர்டு வைத்து தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பீதி உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் இந்த வைரஸ் தற்போது வேகமாக பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும் என்றும் யாரும் தேவையில்லாமல் வெளியூருக்கோ, வெளி மாநிலத்துக்கோ பயணம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஈரோடு மாவட்டம் குள்ளம் பாளையம் அருகே உள்ள தனது வீட்டின் கேட்டில் ஒரு அறிவிப்பு போர்டு ஒன்றை வைத்துள்ளார். அதில் ‘கொரோனா முன்னெச்சரிக்கையாக வரும் 31ம் தேதி வரை சென்னையிலோ அல்லது தன் வீட்டிலோ தன்னை யாரும் சந்திக்க வரவேண்டாம்’ என்று தெரிவித்துள்ளார்.

What do you think?

‘A வகை ரத்தம்’ இருந்தால் கொரோனா வருமா? சீனாவின் பகீர் தகவல்!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 147 ஆக உயர்வு!