எதிர்கட்சி தலைவர் , அன்புமணி உட்பட யாராவது நாடாளுமன்றத்தில் இந்தியா முழுவதும் பூரண மது விலக்கு கொள்கையை கொண்டு வர வேண்டியது தானே என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த செந்தில் பாலாஜி, டாஸ்மாக் மூலம் கிடைக்கும் இந்த வருமானத்தை கொண்டு அரசு நடத்த வேண்டிய அவசியம் திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு இல்லை .
கொரோனா காலத்தில் பெங்களூரில் மது கடைகள் ஒரு நாள் கூட மூடவில்லை. இந்த மாலில் போடப்பட்டுள்ள machine மது விற்பனை செய்யும் நிறுவனங்களால் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், டாஸ்மாக் அமைக்கவில்லை
கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 1977 பேர் நடவடிக்கை எடுக்கப்பட்டு ஐந்தரை கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டினார்.
மதுவிலக்கு குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், எதிர்கட்சி தலைவர் , அன்புமணி உட்பட யாராவது நாடாளுமன்றத்தில் இந்தியா முழுவதும் பூரண மது விலக்கு கொள்கையை கொண்டு வர வேண்டியது தானேவேண்டியது தானே அதற்கு தைரியமில்லை இங்கு வந்து அரசியல் செய்கிறார்கள்.
சென்ற அரசாங்கத்தில் தொடங்கப்பட்ட கடைகள் அறிவிப்பு இல்லாமலேயே 90 கடைகள் மேல் மூடப்பட்டுள்ளது. சட்டசபையில் சில்லறை விற்பனை நடைபெறும் 500 கடைகள் மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.