கடந்த சில தினங்களுக்கு முன்பு தானியங்கி மது விற்பனை இயந்திரம் தொடர்பாக சர்ச்சை எழுந்த நிலையில் சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர்.மாலில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி மது விற்பனை கடையை ஆய்வு செய்த பின் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சி அமைத்த இரண்டு ஆண்டு காலத்தில் இதுவரை 96 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என்றார்.
ஆனால், சில பத்திரிக்கைகள், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் மூலம் வரும் வருமானத்தால் செயல்படுவது போல் செய்தி வெளியிடுவது வேதனை அளிக்கிறது. இந்த மாலில் உள்ள கடைகளை பொறுத்தவரை 12 மணி முதல் இரவு 10 மணி வரை தான் இந்த செயல்படுகிறது. டாஸ்மாக் கடையும் அந்த நேரத்தில் மட்டும் தான் இயங்கும். இதனை 24 மணி நேரம் பயன்படுத்தலாம், கடைக்கு வெளியே உள்ளது ATM உடைத்து எடுப்பது போல் இதனை உடைத்து எடுத்து கொள்ளலாம் என்ற தவறான செய்தியை பரப்புகின்றனர்.
இந்த கடைக்குள் அந்த தானியங்கி இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளததா , அல்லது வெளியேவா 24 மணி நேரமும் எடுக்க முடியுமா என்று தெரிந்து செய்தி வெளியிடுங்கள்.
21 வயதுக்கு குறைவுடைய யாராவது இதில் மது வாங்க முடிகிற அளவுக்கு உள்ளதா? கடையில் இரண்டு ஊழியர்கள் கண்காணிப்பில் தான் கடை இயங்குகிறது. இந்த கடை எங்கு உள்ளது அது எப்படி செயல்படுகிறது என்று தெரிந்து செய்தி வெளியிடுங்கள்.
எந்த மாநிலத்திலும் இது போன்ற தானியங்கி இயந்திரம் இல்லையா பதில் சொல்லுங்கள் என்றவர், 29% நாடாளுமன்ற வருகை பதிவு கொண்ட நாடாளுமன்றத்திற்கே போகாதவர் அன்புமணி ராமதாஸ் இது குறித்து செய்தி வெளியிடுகிறார்.
2019 இல் தான் இந்த தானியங்கி இயந்திரம் திறக்கப்பட்டது. 2013, 2014, 2018 என நான்கு ஆண்டுகளில் நான்கு கடைகளில் அதிமுக ஆட்சியில் தான் திறக்கப்பட்டது.
டாஸ்மாக் நிறுவனம் இந்த தானியங்கி இயந்திரத்திற்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யவில்லை. உள் கட்டமைப்பு வசதிகளை மது நிறுவனங்கள் செய்கின்றன, அதை கடைகளில் பயன்படுத்துகிறார்கள்.