தமிழகத்தில் பத்திரிகையார்களின் நலனுக்காக மாநில அரசு சிறப்பு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் சுங்கச்சாவடிகளில் பத்திரிகையாளர்களுக்கு சலுகை வழங்க நடவடிக்கை எடுப்பதாக செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
செய்தித்துறை அமைச்சர் மு.பெ சாமிநாதன், இவர் சட்டசபை மானியக்கோரிக்கையின் போது பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி பத்திரிகையாளர்கள் நலன் காக்கும் வகையில் பத்திரிகையாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் சுங்கச்சாவடிகளில் பத்திரிகையாளர்களுக்கு சலுகை தர ஏற்பாடு செய்யப்படும் என அமைச்சர் முபெ சாமிநாதன் தெரிவித்துள்ளார்
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் முபெ சாமிநாதன் , ”சுங்கச்சாவடிகளில் பத்திரிகையாளர்கள் கட்டணமின்றி பயணிக்க மத்திய அமைச்சரிடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு என்பது செயல்பாட்டுக்கு வரும்பட்சத்தில் சுங்கச்சாவடிகளில் பத்திரிகையாளர்கள் கட்டணம் செலுத்த வேண்டிய தேவை இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.