மது குடிப்பது அதிகரித்ததால், வருவாயும் அதிகரிக்கும்! – அமைச்சரின் அடடே விளக்கம்

மது குடிப்பது அதிகரித்திருப்பதே டாஸ்மாக் வருவாய் உயர்வுக்கு காரணம் என அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் மனோ தங்கராஜ், தமிழகத்தின் வருவாய் பற்றாக்குறை அதிகரித்துக்கொண்டே செல்வதாக குற்றம்சாட்டினார். ஆனால், டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும், இது அரசுக்கு நல்லதல்ல என்றும் அவர் கூறினார். எப்போது மதுவிலக்கை அமல்படுத்துவீர்கள் என்றும் மனோ தங்கராஜ் வினவினார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி. தமிழகத்தில் மது குடிப்பது அதிகரித்திருப்பதே டாஸ்மாக் வருவாய் அதிகரிப்புக்கும் காரணம் என தெரிவித்தார். மக்கள் குடிக்கிறார்கள், அதற்காக என்ன செய்ய முடியும் என்றும் அவர் கேள்வியெழுப்பினார். மேலும், படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என அரசு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் என்று கூறிய அமைச்சர் தங்கமணி, ஜெயலலிதா இருக்கும்போது கடைகளின் எண்ணிக்கையும், கடைகள் செயல்படும் நேரமும் குறைக்கப்பட்டதையும் சுட்டிக் காட்டினார்.

What do you think?

குளத்திற்குள் சரிந்த 8 வீடுகள்; வீட்டில் இருந்தவர்கள் உயிர் தப்பிய அதிசயம்!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; இந்தியாவில் இறைச்சிக்கு கட்டுப்பாடு?