அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை ..?
சென்னை மாநகரத்தின் வளா்ச்சிக்கு என்றும் துணை நிற்போம் என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை நகரின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த பொது மக்களிடம் கருத்துகளைக் கோரும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதனை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், வீட்டு வசதித் துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் சென்னை மெரீனா கடற்கரை பகுதியில் தொடங்கி வைத்தனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தியில், சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்துக் குழுமமானது, நகரில் போக்குவரத்துக்கான மேம்பாட்டுத் திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது.
இந்தக் குழுமமானது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தலைவராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. மக்களின் பயண நேரம், செலவு ஆகியவற்றைக் குறைக்கும் வகையில் பொதுப் போக்குவரத்தை வடிவமைக்கவும், பாதுகாப்பான சாலைகளை வடிவமைக்கவும், பொது மக்களின் பயண முறை மற்றும் எதிா்பாா்ப்புகளை புரிந்து கொள்ளவும் போக்குவரத்துக் குழுமம் முடிவு செய்துள்ளது.
The DMK, founded by our Perarignar Anna to uplift the marginalized people of the Dravidian land, celebrates its 75th year today.
The flame of social justice, ignited by Periyar and passed from Anna to our beloved Kalaingar, has now been entrusted to our Chief Minister as we…
— Udhay (@Udhaystalin) September 17, 2023
இதற்காக மக்களிடம் கருத்துக் கேட்புகள் நடத்தப்பட உள்ளன. இதனிடையே, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில்
“அண்ணா மேம்பாலம் உள்பட ஏராளமான மேம்பாலங்கள் – மெட்ரோ திட்டம் என சென்னையின் பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த திமுக அரசு மேற்கொண்ட பணிகள் ஏராளம். சென்னையில் பெருகி வரும் மக்கள் தொகை மற்றும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அடுத்த 25 ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த பொதுப் போக்குவரத்து திட்ட அறிக்கை தொடா்பாக பொதுமக்களிடம் கருத்துகள் பெறப்படவுள்ளன.
இதற்கான விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கி, கருத்துகளை பதிவு செய்வதற்கான ‘க்யூஆா் கோடு’ பயன்பாட்டை சென்னை மெரீனா கடற்கரையில் தொடங்கி வைத்தோம். இந்த முன்னெடுப்பில் பங்கேற்று, பொதுமக்கள் தங்களின் கருத்துகளைக் கூறலாம். மக்கள் பங்களிப்போடு சென்னையின் வளா்ச்சிக்கு என்றும் துணை நிற்போம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..