நாளை மாலை 6 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

நாளை மாலை 6 மணி வரை பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் அச்சமின்றி பயணிக்கலாம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 160க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்த முடியாமல் அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாளை மாலை 6 மணி தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் வெளியூர் மக்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல தற்போது கோயம்பேடு பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து பேசிய போக்குவரத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறுகையில், “மக்கள் சொந்த ஊருக்கு செல்ல சென்னை மாநகர பேருந்துகள் கூடுதல் தூரமாக விழுப்புரம், திண்டிவனம், திருச்சி வரை இயக்கப்படும் என்றும் பொதுமக்கள் முன்கூட்டியே தங்களின் பயணத்தை திட்டமிட வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

ஆம்னி பேருந்துகளின் இயக்கம் குறைவாக இருப்பதாலும் பேருந்துகளில் கூட்ட நெரிசலை தவிர்க்கவும் சென்னை மாநகர பேருந்துகள் திருச்சி வரை இயக்கப்படுவதாகவும், நாளை மாலை 6 மணி வரை பேருந்துகள் இயக்கப்படுவதால் மக்கள் அச்சமின்றி பயணிக்கலாம் என்றும் கூறினார்.

What do you think?

கொரோனா வைரசால் சிங்கப்பூரில் முதல் பலி!

வீட்டிலிருந்தபடியே வேலை செய்வோருக்காக ஜியோவின் அதிரடி Offer!