‘பார்வையாளர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகளை நடத்துங்கள்’ வெளியுறவுத்துறை அமைச்சகம்!

ஐபிஎல் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்துமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஐபிஎல் நிர்வாகக்குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளது.

கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்க்கும் 13வது ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 29ம் தேதி தொடங்குகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவிலும் 73 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதனால் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுமா? என்று கேள்வி பலரிடமும் எழுந்தது. ஏனெனில் ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவதற்காக வெளிநாடுகளிலிருந்து வீரர்கள், ரசிகர்கள் என பலரும் வருகை தருவதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறப்பட்டது.

இதனால் போட்டியை நடத்துவது குறித்து பிசிசிஐ ஆலோசனை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளை பார்வையாளர்கள் இன்றி நடத்துமாறு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஐபிஎல் நிர்வாகக்குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளது.

ஐபிஎல் போட்டிகளை காண வரும் பார்வையாளர்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவலாம் என்பதால் பார்வையாளர்கள் இன்றி ஐபிஎல் போட்டிகளை நடத்துமாறு வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்து ஐபிஎல் நிர்வாககுழு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

What do you think?

‘காப்பாத்துங்க சார், நாங்க புள்ள குட்டிகாரர்கள்’ சட்டசபையில் துரைமுருகனால் எழுந்த சிரிப்பலை!

இந்தியா, தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து!