அமெரிக்க விசாவில் குளறுபடி..!! இன்போசிஸ் மீது நடவடிக்கை…!! சோசலிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா புகார்…!!
இன்போசிஸ் நாராயணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சரின் தனிப்பிரிவில் சோசலிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா மனு கொடுத்துள்ளனர்.
இது குறித்து அக்கட்சியின் தலைவர் ராஜி அந்தோணி சாமி சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில் வழங்கிய புகாரில் கூறியிருப்பதாவது இன்போசிஸ் நிறுவனம், இந்தியாவில் இருந்து தொழிலாளர்களை அமெரிக்காவுக்கு அழைத்து சென்றுள்ளது. அவர்களை தொழிலாளர்களுக்கான விசாவிற்கு பதிலாக பார்வையாளர்களுக்கு வழங்கப்படும் விசா வை விண்ணப்பித்து வழங்கியுள்ளது இந்த செயல் அமெரிக்கநாட்டின் தொழிலாளர் நலனுக்கு எதிரானது. அதன் மூலம் தொழிலாளர்களுக்கு கிடைக்க கூடிய சலுகைகள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அமெரிக்க நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து இன்போசிஸ் நிறுவனம் மீது ரூபாய் 283 கோடி இந்திய தொகையை (அமெரிக்க மதிப்பில் 3.3 மில்லியன் டாலர் அளவுக்கு) அபராதமாக விதித்துள்ளது. அவர் அந்த அபராதத்தை செலுத்தி உள்ளது குற்றத்தை ஒப்பு கொண்ட செயலாகும் இந்த சம்பவம் இந்தியாவுக்கு வெளியே நடந்தாலும் நம்முடைய தொழிலாளர்களை அமெரிக்காவுக்கு முறையில்லாமல் பார்வையாளர் விசாவின் மூலம் அழைத்து சென்று அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகளை கிடைக்காமல் செய்தது தண்டனைக்குரிய குற்றமாகும்.
இது போன்ற தவறுகள் தொடர்ந்து நடைபெறாமல் தடுக்க வேண்டும் எனவே வெளிநாட்டு தமிழர் வாழ் நலன் கருதி வேலை வாய்ப்புக்காக வெளிநாடுகள் செல்லும் இளைஞர்களின் நலன் கருதி இன்போசிஸ் நாராயணமூர்த்தி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சோஷலிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா தலைவர் ராஜு அந்தோணிசாமி வலியுறுத்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..