பிரசவத்தின்போது தவறான சிகிச்சை.. ஒரு வருடமாக கோமா.. மருத்துவர்களிடம் விசாரணை..
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மருத்துவமனையில் கடந்த 2023ம் ஆண்டு தெள்ளுர் கிராமத்தை சேர்ந்த ராம்பிரகாஷ் என்பவரின் மனைவி ஜெயந்தி பிரசுவத்திற்கு அனுமதிக்கபட்டு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
பிரசவம் முடிந்து 1மணி நேரத்தில் ஜெயந்தியின் பின்பக்கதலையில் மற்றும் கால் மற்றும் உடம்பில் பலத்த காயம் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார்.
உடனடியாக மருத்துவர்கள் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்காமல் வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து 57நாட்கள் தொடர் சிகிச்சைக்கு பின்பு மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை சிகிச்சை அளிக்கப்பட்டும், கடந்த ஒரு வருடமாக கோமாவில் இருந்து சகஜநிலைக்கு ஜெயந்தி திரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஜெயந்தியின் பெற்றோர் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆரணி அரசு மருத்துவமனையில் பிரசவத்தில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாக என் மகள் ஒருவருடமா கசுயநினைவின்றி உள்ளதாக புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து, வேலூர் மாவட்ட இணை இயக்குநர் பாலசந்தர் தலைமையில் ஆரணி அரசு மருத்துவமனையில் நேரில் சென்று ஜெயந்தியின் பெற்றோர் மற்றும் அரசு மருத்துவர்களிடம் மருத்துவத்துறை அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
-பவானி கார்த்திக்