பயிறு வாங்கியதும் கண்டிப்பா இதை செய்ங்க போதும்..!
பச்சை மிளகாய் வைத்திருக்கும் டப்பாவில் சிட்டிகை மஞ்சள்தூள் போட்டு மூடி வைத்தால் சீக்கிரம் பழுக்காமல் இருக்கும்.
பயிறு வகைகளை வாங்கியதும் லேசாக வறுத்து பின் சேமித்து வைக்க பூச்சுகள் பிடிக்காது.
பருப்பு ரசம் செய்யும்போது இரண்டு பச்சை மிளகாயை நறுக்கி சேர்க்க சுவை சூப்பராக இருக்கும்.
வீட்டில் இருக்கும் ஜாம் கெட்டியாகிவிட்டால் ஒரு பாத்திரத்தில் சூடான நீரை ஊற்றி அதில் அந்த டப்பாவை சிறிது நேரம் வைக்க ஜாம் இளகிவிடும்.
மீன் குழம்பில் அதிக புளி சேர்த்தால் மீன் குழம்பு சுவையாகவும் புளிப்பாகவும் இருக்கும்.
புதிதாக மண் பாத்திரம் வாங்கியதும் அதில் எண்ணெய் தடவி அடுப்பில் வைத்து சூடேற்றும்போது மண் வாசனை வராது, பாத்திரத்தில் விரிசலும் விழாது.
வீட்டில் பிரியாணி அல்லது புலாவ் செய்யும்போது அதில் நீர் பாதி தேங்காய் பால் சேர்த்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
ஆப்பிள் பழத்தில் தேன் கலந்து முகத்தில் தடவி வர வறண்ட சருமம் மென்மையாக மாறும்.
வெங்காய பகோடா செய்யும்போது வெங்காயம் மற்றும் இஞ்சி ஆகியவற்றை சிறிது அரைத்து அதில் மாவு கலந்து பகோடா செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.
கீரைத்தண்டு, கொத்தமல்லி இலை மற்றும் வாழைத்தண்டு வாடாமல் இருக்க அவற்றை அலுமினிய காகிதத்தில் சுற்றி வைக்கலாம்.
பால் பாயாசம் செய்யும்போது பால் திரிந்து போனால் ஒரு சிட்டிகை சமையல் சோடா சேர்த்து கொண்டால் திரிந்த பால் சரியாகிவிடும்.