தேங்காய்ப்பால் அல்வா செய்வது எப்படி..!
தேங்காய்-1
சக்கரை-1கப்
ஏலக்காய்-சிறிதளவு
நெய்- தேவையான அளவு
அவல்- ¾ கப்.
தேங்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு தண்ணீர் விட்டு அரைத்து அதனை வடிகட்டி தேங்காய் பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மிக்ஸியில் அவலை சேர்த்து அரைத்துக் கொண்டு அதை தேங்காய் பாலில் ஊற வைக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதனை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு நாண்ஸ்ட்டிக் வாணலில் ஊறவைத்த அவலை சேர்த்து அதில் வெல்லத்தை ஊற்றி ஏலக்காய், நெய் ஆகியவற்றை சேர்த்து கிளறிக் கொள்ள வேண்டும்.
அனைத்தும் நன்றாக திரண்டு அல்வா பதத்திற்கு வந்ததும் இறக்கி விடவும், இப்போது டேஸ்டியான தேங்காய்ப்பால் அல்வா தயார்.
