ருசியான பால்கோவா ரோஸ் மில்க் ரெசிபி..!
முழுகொழுப்புள்ள பால் – 1 1/4 லிட்டர்
பால்கோவா – 200 கிராம்
ரோஸ் சிரப்
ஏலக்காய் தூள் – 1/4 தேக்கரண்டி
குங்குமப்பூ
ஐஸ் கட்டிகள்
பாலை கொதிக்க வைத்து அதில் ரோஸ் சிரப் சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
மற்றோரு பாத்திரத்தில் பாலை ஊற்றி அதில் பால்கோவா சேர்த்து கலந்து விடவும்.
பின் அதில் குங்குமபூ,சர்க்கரை,ஏலக்காய்த்தூள் சேர்த்து கலக்கவும்.
இந்த கலவை கெட்டியானதும் அதனை இறக்கி ஆறவிடவும்.
ஒரு கண்ணாடி டம்ளரில் ஐஸ்கட்டியை சேர்த்து அதன் மேல் பால்கோவா கலவை ஊற்றி அதன் மேல் ரோஸ் பாலை ஊற்றவும்.
அனைத்தையும் நன்றாக கலந்து விடவும். இப்போ ருசியான பால்கோவா ரோஸ் மில்க் தயார்.