காலை உணவு..! தக்காளி அவல் உப்மா..!
அவல் – 2 கப்
வேர்க்கடலை – 1/4 கப்
எண்ணெய் – தேவையானவை
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி
கடலை பருப்பு – 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 2 நறுக்கியது
இஞ்சி – 1 துண்டு நறுக்கியது
தக்காளி விழுது – 3 பழம்
கறிவேப்பிலை
மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி
உப்பு – தேவையானவை
கொத்தமல்லி இலை – நறுக்கியது
நெய் – 1 தேக்கரண்டி
அவலை நீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.
வாணலில் வேர்க்கடலை போட்டு பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
பின் வாணலில் எண்ணெய் ஊற்றி உளுத்தம் பருப்பு,கடலை பருப்பு,கடுகு,சீரகம் சேர்த்து வறுக்கவும்.
பின் பெருங்காயத்தூள்,வெங்காயம்,மிளகாய்,இஞ்சி சேர்த்து வதக்கவும்.
பின் கறிவேப்பிலை,தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
அத்துடன் மஞ்சள்தூள்,மிளகாய்த்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலந்து விட வேண்டும்.
பின் அவல் சேர்த்து கலந்து அத்துடன் வறுத்த வேர்க்கடலை, கொத்தமல்லி இலை சேர்த்து கிளறி விடவும்.
கடைசியாக நெய் சேர்த்து கிளறி இறக்கி விட வேண்டும்.
அவ்வளவு தான் சுவையான தக்காளி அவல் உப்மா தயார்.