ராகி சாக்லேட் பான்கேக் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
ராகி மாவு 1
கோகோ பவுடர் 2 ஸ்பூன்
சர்க்கரை 2 ஸ்பூன்
சோடா உப்பு 1 ஸ்பூன்
உப்பு சிட்டிகை
முட்டை 1
பால் 1 கப்
வெண்ணெய் 2 ஸ்பூன்
வெண்ணிலா எசென்ஸ் 1 ஸ்பூன்
சாக்லேட் சிப்ஸ் 1/2 கப்
தேன் 2 ஸ்பூன்
பழங்கள் நறுக்கியது
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் ராகி மாவு, கோகோ பவுடர், சர்க்கரை, சோடா உப்பு மற்றும் சிட்டிகை உப்பு கலந்து அனைத்தையும் நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
மற்றொரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதில் பால், வெண்ணெய், வெண்ணிலா எசென்ஸ் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு பாத்திரத்தில் இருப்பவற்றை ஒன்றாக கலந்து அதில் சாக்லேட் சிப்ஸ் கலந்துக் கொள்ளலாம்.
இந்த கலவையை அப்படியே 15 நிமிடங்களுக்கு விட வேண்டும். அப்போதான் கலவை நன்றாக உப்பி சாப்டாக வரும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து சிறிது வெண்ணெய் விட்டு சூடானதும் அதில் கால் கரண்டி மாவினை எடுத்து ஊற்றவும்.
அப்படியே மிதமான தீயில் வேகவைக்கவும். மறுபக்கம் பத்திரமாக மற்றொரு கரண்டி பயன்படுத்தி திருப்பிப்போட்டு பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும்.
தயாரித்தவற்றை ஒரு தட்டில் மாற்றி அதன் மேலே நறுக்கிய பழங்கள் மற்றும் தேன் ஊற்றவும்.
அவ்வளவுதான் சுவையான ராகி சாக்லேட் பான்கேக் தயார்.
சூப்பரான டேஸ்டில் பான்கேக் தயார், குழந்தைகளுக்கு இது செய்து கொடுங்க அப்பறம் பாருங்க ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.
வீட்டில் வாழைப்பழம் இருந்தால் அதனை மசித்து கூட இதில் கலந்து செய்யலாம்.