அன்பழகனின் உடலுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி, கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து !

திமுகவின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனின் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

மூத்த அரசியல்வாதியும், திமுகவின் பொதுச்செயலாளருமான பேராசிரியர் க.அன்பழகன் இன்று அதிகாலை 1 மணியளவில் காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அன்பழகனின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்தார். மேலும் திமுக கட்சியின் சார்பில் 7 நாட்கள் துக்க நாட்களாக அனுசரிக்கப்படும் என்றும் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுவதாகவும், மேலும் கட்சியின் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடும்படியும் திமுக நிர்வாகிகளுக்கு வேண்டுகோள்விடுத்துள்ளார்.

இந்நிலையில் தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் க. அன்பழகனின் உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டது.அவரது உடலுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

What do you think?

‘விஜய் அரசியலுக்கு வந்தால் நான் ஆதரிப்பேன்’ முன்னணி நடிகரின் அதிரடி அறிவிப்பு!

‘அன்பழகனின் மறைவு தமிழ்நாட்டிற்கு பேரிழப்பு’ முதலமைச்சர்!