‘பேராசிரியர் பெருந்தகையே எனக்கு பெரியப்பா’ ஸ்டாலின் எழுதிய உருக்கமான கடிதம்!

திமுக பொதுசெயலாளர் க.அன்பழகனின் மறைவையடுத்து திமுக தலைவர் முக.ஸ்டாலின் உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

திமுக பொதுசெயலாளர் க.அன்பழகன் இன்று அதிகாலை ஒரு மணியளவில் காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் பேராசிரியர் க.அன்பழகன் குறித்து மிகவும் உருக்கமான கடிதத்தை எழுதியுள்ளார். அதில் குறிப்பாக “எனக்கு பெரியப்பா கிடையாது. பேராசிரியர் பெருந்தகையே எனக்கு பெரியப்பா என்றும், எனக்கு நீங்கள் ஊட்டிய இனப்பால், மொழிப்பால் , கழகப்பால் ஆகிய முப்பால் என்னுள் இருக்கிறது என்றும்.

மேலும் கலைஞருக்கு பின்னால் தம்பி ஸ்டாலினே தலைவர் என்று அவர் அறிவித்தார் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டார்.

What do you think?

‘கொரோனாவா, எங்ககிட்ட தான் இது இருக்கே’ வைரலாகும் ஹிப்ஹாப் தமிழா ஆதியின் Insta பதிவு!

‘அன்பழகன் இறந்தபின்பும் கடிதம் கொண்டு வந்த தபால்காரர்’ கண்கலங்க வைத்த சம்பவம்!