ஒடிசா மாநில முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரனுக்கு இறுதி அஞ்சலி…
மறைந்த ஒடிசா மாநில முன்னாள் ஆளுநர் எம்.எம்.ராஜேந்திரனுக்கு, அரசு சார்பில் காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1957ஆம் ஆண்டு தஞ்சை மாவட்டத்தில் தனது பணியைத் தொடங்கி, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் ஆட்சித் தலைவராகவும், ஒன்றிய அரசின் செயலாளராகவும், தமிழ்நாட்டின் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றிய எம்.எம்.ராஜேந்திரன் ஓய்வுக்குப் பிறகும் ஒடிசா மாநில ஆளுநராக பணியாற்றினார்.
இந்நிலையில், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று காலமானார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
எம்.எம்.ராஜேந்திரன் மறைவு பேரிழப்பு என தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசு சார்பில் காவல் துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்படும் அறிவித்துள்ளார்.
முன்னதாக, எம்.எம். ராஜேந்திரன் உடலுக்கு மலர்மாலை வைத்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அஞ்சலி செலுத்தினார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.