சென்னையில் முதல்வர் முக ஸ்டாலின் வேளாண் துறை சார்பில் நடமாடும் காய்கறி அங்காடிகளை தொடங்கி வைத்துள்ளார். வீட்டிற்கே சென்று காய்கறிகளை விற்பனை செய்யும் வகையில் இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
முதல்வர் முக ஸ்டாலின் தினசரி பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். இதை தொடர்ந்து இன்று சென்னையில் நடமாடும் காய்கறி அங்காடிகளை தொடங்கி வைத்துள்ளார். வேளாண் துறை வாகனங்கள் மூலம் காய்கறிகளை வீட்டிற்கே சென்று குறைந்த விலையில் விற்பனை செய்யும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மேலும், இந்த திட்டம் ரூ.40 லட்சம் மதிப்பில் 20 வாகனங்கள் மூலம் நடமாடும் காய்கறி அங்காடிகள் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. குறைந்த விலையில் வீட்டிற்கே சென்று காய்களை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதே இந்த திட்டத்தின் பிரதான நோக்கம் இன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திட்டம் கோவை, திருச்சி, செங்கல்பட்டு, திருப்பூர், சேலத்தில் உள்ளிட்ட மாவட்டங்களிலும் தொடங்கப்பட்டுள்ளது.