நவீன மயமாகும் பிராட்வே …!! அமைச்சர் சேகர் பாபு அளித்த உறுதி…!!
சென்னை பிராட்வே பேருந்து நிலையத்தை 822.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் குறளகம் வரவுள்ள இடத்தை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவது மட்டுமின்றி அதனை சிறப்பாக செய்படுத்தியும் வருகிறார்.. அவரது வழிகாட்டுதலின் படி அமைச்சர்களும் உடனடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.. அதன் தொடர்ச்சியாக இன்று
சென்னை பிராட்வே பழைய பேருந்து நிலையமானது 75 ஆண்டுகளாக அங்கு உள்ளது., எனவே அதனை 822.70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பல்நோக்கு ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் மற்றும் குறளகம் கட்டப்படவுள்ள இடம், 95 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய பன்னோக்கு மையத்தையும் மற்றும் வால்டாக்ஸ் ரோடு, 8.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய சமுதாய நலக்கூடத்தையும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் கடந்த மார்ச் மாதம் 14ம் தேதி சென்னை மின்ட் (தங்க சாலையில்) வடசென்னை வளர்ச்சி திட்டத்தை துவக்கி வைத்தார்.. அதன் பின்னர் அனைத்து அரசு துறைகளுக்கும் வடசென்னையை முழுமையாக மாற்ற வேண்டும் எனவும்., மக்களின் தேவைகளை உடனடி பூர்த்தி செய்திட வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.. அவரின் ஆணைப்படி நாங்கள் செயல்பட்டு கொண்டு இருக்கிறோம்..
இன்று புனரமைப்பு பணிக்காக இங்கு பார்வையிட்டோம்., இந்த பிராட்வே பேருந்து நிலையத்தை முழுவதுமாக இடித்து அதனை 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய நவீன பேருந்து நிலையம் கட்டப்படவுள்ளது.
அதேபோல் குறளகம் கட்டிடத்தினை இடித்து விட்டு 10 மாடிகள் கொண்ட வணிக வளாக கட்டிடம் கட்டப்பட உள்ளது. அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளதாகவும். சென்னை பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் வடசென்னை பகுதிகள் விரைவில் நவீன மயமாகும் எனவும் அவர் உறுதி அளித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..