Exclusive Today Trending இந்தியா

ஏர் இந்தியா, சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு மோடி பாராட்டு

சீனாவில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட ஏர் இந்தியா, சுகாதாரத் துறை ஊழியர்கள் ஆகியோருக்கு கடிதம் மூலம் பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

சீனாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளும் தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும், சீனாவிற்கு மற்ற நாடுகள் விமான சேவையை முற்றிலும் நிறுத்தியது. இந்நிலையில் சீனாவிலுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு 2 விமானங்களை அனுப்பியது. சீனாவிலிருந்து 300-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் விமானம் மூலம் இந்தியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.

மீட்பு பணியில் ஈடுபட்ட 34 பேர் அடங்கிய குழுவிற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். அதில், மீட்பு பணியில் ஈடுபட்ட ஏர் இந்தியா, சுகாதாரத் துறை ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் என மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் இந்த கடிதத்தை விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் சம்பந்தப்பட்ட மீட்புக் குழுவினரிடம் வழங்கினார்.

Related posts

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்; இந்தியாவில் இறைச்சிக்கு கட்டுப்பாடு?

Digital Team

உமர் அப்துல்லா, மெகபூபா முஃப்தி ஆகியோர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது – தலைவர்கள் கண்டனம்

superadmin

“அனைவருக்காகவும் உழைப்பேன்” – அரவிந்த் கெஜ்ரிவால் உறுதி

Digital Team

தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த விவசாய சங்கத்தினர்

Digital Team

மதுரை CAA போராட்டத்தில் ஒருவர் தீக்குளிக்க முயற்சி!

Digital Team

இந்தியாவை ஒயிட்வாஷ் செய்த நியூசிலாந்து

Digital Team
You cannot copy content of this page
Madhimugam