மோடி எனும் சர்வாதிகாரி..!! வீழ்த்த 140 கோடி மக்கள்.!! அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு பேட்டி..!!
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு மற்றும் பணமோசடி வழக்கில் மார்ச் 21ம் தேதி கைது செய்யப்பட்டிருந்த அரவிந் கெஜ்ரிவால், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.., இந்நிலையில் இன்று இடைக்கால ஜாமீனில் வெளியே வந்த அரவிந்த் கெஜ்ரிவால்,
இன்று டெல்லியில் உள்ள அனுமன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், மீண்டும் ஜனநாயகத்திற்கு முடிவு கட்டுவதற்கான சர்வாதிகாரம் தழைத் தோங்கியுள்ளது என்றும். தான் சர்வாதிகாரத்திற்கு எதிராக போராடிக் கொண்டு வருவதாகவும் கூறினார்.
#WATCH | Delhi CM Arvind Kejriwal says "They will send opposition leaders to jail and will finish (Nipta denge) the politics of BJP leaders…Our ministers, Hemant Soren, ministers of Mamata Banerjee's party are in jail…If they win again, then Mamata Banerjee, MK Stalin, Tejashwi… pic.twitter.com/xtzToyYuQd
— ANI (@ANI) May 11, 2024
ஆனால் தனி ஆளாக எதுவும் செய்ய இயலாது, ஜனநாயகத்தை ஒழிக்க நினைக்கும் சர்வாதிகாரி மோடிக்கு முடிவு கட்ட மக்கள் அனைவரும் ஆதரவு கொடுக்க வேண்டும், அதற்காக 140 கோடி மக்களிடம் தான் மண்டியிட்டு கேட்டுக் கொள்வதாக அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
மோடியை தாக்கிய அரவிந்த் கெஜ்ரிவால் :
மேலும் உச்ச நீதிமன்றம் தனக்கு 21 நாட்கள் மட்டுமே ஜாமீன் வழங்கி இருப்பதால், இன்று முதல் நாடு முழுவதும் தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ள போவதாகவும், தனது உடம்பில் ஓடும் ஒவ்வொரு சொட்டு ரத்தமும் நாட்டுக்காக வழங்குவதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், இந்தியாவின் எதிர்காலம் ஆம் ஆத்மி கட்சியிடம் உள்ளது.., எதிர்காலம் என்பதை பிரதமர் அறிந்து கொண்டதால் பயத்தில் பாஜக தம்மை கீழே தள்ளப் பார்ப்பதாகவும் கூறினார்.
ஆம் ஆத்மி ஒரு சிறிய கட்சி, இரண்டு மாநிலங்களில் மட்டும் முழுவீச்சில் உள்ளது, ஆனால் பிரதமர் மோடி ஆம் ஆத்மி கட்சியின் நான்கு தலைவர்களை சிறைக்கு அனுப்பியதகாவும், ஒரே நேரத்தில் நான்கு தலைவர்களை சிறைக்கு அனுப்பினால் கட்சியை ஒன்றுமில்லாமல் செய்து விடலாம் என பிரதமர் மோடி பிளான் போட்டு செயல்பட்டார்..
#WATCH | Delhi CM Arvind Kejriwal says "…Whenever a dictator tried to take over, the people of the country uprooted him. Today again a dictator wants to end democracy…I am fighting against that dictator but I cannot do anything alone. I have come to beg from 140 crore people… pic.twitter.com/rLnnGXjbwA
— ANI (@ANI) May 11, 2024
இந்தியாவின் வருங்காலம் ஆம் ஆத்மி கட்சியிடம் இருக்கிறது என பிரதமர் மோடி நினைத்ததால் தான் ஆம் ஆத்மீயை அழிக்க மோடி நன்கு திட்டம் தீட்டி வருகிறார்.., ஏறத்தாழ 50 நாட்களுக்கும் மேல் நான் சிறையில் இருந்தேன் பிறகு சிறையில் இருந்து நேரடியாக மக்களை சந்திக்க வந்தது நல்ல உணர்வை ஏற்படுத்தியுள்ளது என கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
தற்போது நானும் எனது மனைவியும் பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மானுடன் அனுமன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளோம். பஜ்ரங் பலியின் ஆசிர்வாதம் ஆம் ஆத்மி கட்சிக்கு இருக்கிறது. ஊழலுக்கு எதிரான இந்த போராட்டம் கட்டாயம் தொடரும். என்றும் ஒரே நாடு ஒரே தலைவர் என்பது பிரதமர் மோடியின் திட்டம் என அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
எதிர்க்கட்சியினரை சிறைக்கு அனுப்பி இந்த நாட்டில் ஜனநாயக படுகொலை செய்ய முயற்சி நடைபெறுகிறது.. அனைத்து மாநிலங்களிலும் தற்போது பாஜகவின் வெற்றி வாய்ப்பு குறைந்து விட்டது.. பிரதமர் மோடி அமல்படுத்த இருக்கும் இந்த திட்டம் மிகவும் ஆபத்தானது, மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் சிறைவாசம் உறுதி என்றும் அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
பஞ்சாப் முதலமைச்சர் பக்வந்த் மான் :
அவரை தொடர்ந்து பேசிய பஞ்சாப் முதலமைச்சர் “பக்வந்த் மான்” ஜூன் 4ம் தேதி மத்தியில் ஆம் ஆத்மி கூட்டணி இல்லாத கட்சி ஆட்சி அமைக்காது என்றும் விரைவில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என்றும் கூறினார்.
மேலும் அசாம், குஜராத், பஞ்சாப் என எங்கு சென்றாலும், அரவிந்த் கெஜ்ரிவால் என்பது மனிதன் அல்ல சிந்தனை என்று கெஜ்ரிவாலை கைது செய்யலாம், அவரது சிந்தனைகளை கைது செய்ய முடியாது என பக்வந்த் மன் கூறினார்.
மேலும் நடந்து முடிந்த 3 கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவுக்கு பின்னர் 400 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறாது என பக்வந்த் மான் தெரிவித்துள்ளார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..