மோடி ஒரு காற்று ஊதப்பட்ட பலூன்..! மோடிக்கு தைரியம் இருக்கிறதா..? திமுக மாணவர் அணி கண்டன ஆர்ப்பாட்டம்..!
சமூக நீதி, மாநில உரிமை, கல்வி உரிமைகளுக்கு எதிரான நீட் தேர்வை ரத்து செய்ய மறுக்கும் ஒன்றிய பாசிச பாஜக அரசை கண்டித்தும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்கிட வலியுறுத்தியும், நீட் தேர்வில் நடந்தேறியுள்ள மோசடிகளுக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பாஜக அரசின் ஆணைப்படி தேசியத் தேர்வு முகமை மூலம் நடத்தப்படும் மோசடிகள் நிறைந்த நீட், க்யூட், நெட் உள்ளிட்ட நுழைவு மற்றும் தகுதி தேர்வுகளை ரத்து செய்ய வலியுறுத்தி கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணை ஏற்று திமுக மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது….
இதில் திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்பி எழிலரசன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி, கழக மாணவர் அணியின் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர், வட்ட நிர்வாகிகள் மற்றும் கல்லூரி மாணவர் அமைப்பின் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்..
மேலும் கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கழக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் பூச்சி முருகன், மருத்துவர் அணி செயலாளரும், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினருமான எழிலன் நாகநாதன், திராவிடர் கழக துணை பொது செயலாளர் பிரின்ஸ் என்னாரஸ் பெரியார், பிரின்ஸ் கஜேந்திர பாபு உள்ளிட்ட கல்வியாளர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் தோழமை மாணவர் அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்..
ஒன்றிய அரசே ஓயமாட்டோம் ஓயமாட்டோம் நீட் – ஐ ஒழிக்கும் வரை ஓயமாட்டோம்.. பறிக்காதே, பறிக்காதே, ஒன்றிய அரசே எங்கள் கல்வி உரிமையை பறிக்காதே… ரத்து செய், ரத்து, செய் நீட் என்னும் அநீதியை ரத்து செய், #banneet என்ற பதாகைகளை கையில் ஏந்தி மாணவர்கள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்..
தொடர்ந்து பேசிய திமுக மாணவர் அணி செயலாளர் சி.வி.எம்பி எழிலரசன்… நீட் தேர்வை ஒழிக்கும் வரை திமுக மாணவர் அணி ஓயாது, தேவைப்பட்டால் இந்தியாவின் தலைநகர் டெல்லியிலும் இந்த போராட்டத்தை எடுத்து செல்வோம்… என கூறினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலன் நாகநாதன் நீட் தேர்வால் என்னென்ன பாதிப்பு வரும் என்று திமுக முதலிலேயே சொல்லியது தற்போது அது அனைத்தும் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.
நீட் தேர்வு ஒரு மோசடி தேர்வு அதை வைத்து பல கோடி ரூபாய் சம்பாதிப்பார்கள், கோச்சிங் மாஃபியாவை மட்டுமே பாதுகாக்க கூடிய அமைப்புதான் தேசிய தேர்வு முகமை, தேசிய தேர்வு முகமை மற்றும் கோச்சிங் சென்டர்களுக்கு இடையே உள்ள கள்ளத் தொடர்பால் தான் இன்று நீட் தேர்வால் அனைத்து மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்…
மோடிக்கு தைரியம் இருந்தால் அனைத்து கோச்சிங் சென்டரையும் தடை செய்ய வேண்டும் என்று சொல்ல முடியுமா..? இன்று நீட் தேர்வுக்கு எதிராக இந்தியா முழுவதும் குரல் வருகிறது.. என எழிலன் நாகநாதன் கருத்து தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பேசிய திராவிடர் கழக துணை பொது செயலாளர் பிரின்ஸ் என்னாரஸ் பெரியார். அன்றைக்கு தொடங்கிய நீட் போராட்டம் பிறகு தமிழ்நாட்டுக்கு கட்டாயம் என்று ஆனதற்கு பிறகு கூட ஏறத்தாழ 8 ஆண்டு காலமாக தொடர் போராட்டங்களை நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்…
இன்றைக்கு 8 ஆண்டு காலமாக ஒலித்த நம்முடைய குரல்தான் இந்தியா முழுமைக்கும் இன்றைக்கு கேட்டுக் கொண்டிருக்கிறது. எப்போதும் தமிழ்நாடு தான் தொடக்கப்புள்ளி திராவிட இயக்கம்தான் சமூக நீதிக்காக அடிப்படை தளம் என்பதை இந்த பிரச்சனையும் தெரிவித்து இருக்கிறது.
பல ஆண்டுகள் நாம் முன்னோக்கி இருக்கிறோம் என்பதற்கு இதுவே. இன்றைக்கு நீட் தேர்வு எடுத்துக்காட்டாக இருக்கிறது.. நீட் தேர்வு என்பது ஒன்றுமில்லாதது என்பதை எப்போது நாம் எடுத்துச் சொல்லி இருக்கிறோம்.
கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆர்ப்பாட்டத்தில் பேசியது இன்று இந்த ஆர்ப்பாட்டம் இந்தியாவின் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் இன்று நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் குறள் வந்தபோது சபாநாயகர் ஒப்புக்கொண்டார்…
ஆனால் நரேந்திர மோடி பயந்து கொண்டு பதில் சொல்ல எதுவும் காரணம் இல்லாததால் திருடன் கையும் களவுமாக மாட்டிக் கொண்டான் என்று சொல்வார்களோ அல்லவா அதுபோல் நீட் தேர்வு ஊழலில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டதால் இன்று முடிய இருந்த நாடாளுமன்றத்தை நேற்று முடித்து வைத்திருக்கிறார் இது திமுகவிற்கு கிடைத்த வெற்றி..
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..