பெண்ணின் வாழ்க்கை துயரத்தை கேட்டு கண்கலங்கிய மோடி

பிரதமர் நரேந்திர மோடியுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய ஒரு பெண்ணின் வாழ்க்கை துயரத்தை கேட்டறிந்த பிரதமர் மோடி உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.

மக்கள் மருந்தக திட்டத்தின் மூலம் குறைந்த விலையில் வேதிப்பெயரிலான மருந்துகள் விறபனை செய்யப்படுகின்றன. நாடு முழுவதும் 700 மாவட்டங்களில் 6,200 மக்கள் மருந்தகங்கள் அமைத்து இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மார்ச் 1-ஆம் தேதி முதல் இன்று வரை மக்கள் மருந்தக வாரம் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், திட்டத்தின் பயனாளிகளுடன் காணொலிக்காட்சி மூலம் மோடி உரையாற்றினார்.

அப்போது தீபா ஷா என்ற பெண் தனது வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை கண்ணீர் மல்க கூறினார். அதனை கேட்ட பிரதமர் மோடியும் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். பின்னர் உரையாற்றிய மோடி, மாதந்தோறும் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் மக்கள் மருந்தகங்கள் மூலம் மருந்துகளை பெறுவதாகவும், பொதுமக்கள் 2 ஆயிரம் கோடி முதல் 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை மிச்சப்படுத்துவதற்கு இத்திட்டம் உதவுவதாகவும் அவர் தெரிவித்தார்.

What do you think?

‘அன்பழகன் இறந்தபின்பும் கடிதம் கொண்டு வந்த தபால்காரர்’ கண்கலங்க வைத்த சம்பவம்!

அன்பழகனின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய துணை முதலமைச்சர்!