கெஜ்ரிவால் பதவியேற்பும் மோடியின் வாரணாசி பயணமும்!

டெல்லியில் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்க இருக்கும் விழாவில், பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தும் அதில் பங்கேற்காமல் அவர் வாரணாசி செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 70 தொகுதிகளில், ஆம் ஆத்மி கட்சி 62 இடங்களை வென்ரு தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. பாஜக் 8 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றது. இதையடுத்து ஆம் ஆத்மியின் அரவிந்த் கெஜ்ரிவால் மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். வரும் 16 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் நடக்கவிருக்கும் இந்நிகழ்ச்சிக்கு, மற்ற மாநிலங்களின் முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

இதுகுறித்து ஏற்கெனவே ஆம் ஆத்மியின் ஒருங்கிணைப்பாளர் கோபால்ராய் அறிவித்திருந்தார். இந்நிலையில், டெல்லியில் உள்ள அனைவருக்கும் இவ்விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல், பிரதமர் மோடிக்கும், டெல்லியில் உள்ள 7 பாஜக எம்பிக்களுக்கும், புதிதாக தேர்வாகியுள்ள 8 பாஜக எம்.எல்.ஏக்களுக்கும் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஆனால், 16 ஆம் தேதியன்று, பிரதமர் மோடி வாரணாசியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள இருப்பதால், அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக பதவியேற்கும் விழாவில் கலந்துகொள்ள மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

What do you think?

தல அஜித்தின் சவால்; சொன்ன மாதிரியே நடந்துடுச்சே! – ஒரு சின்ன ஃப்ளாஸ்பேக்

மனித உரிமை மீறல் – இலங்கை ராணுவ தளபதிக்கு அமெரிக்காவில் நுழைய தடை