22-ஆம் தேதி மக்கள் ஊரடங்கு! – பிரதமர் மோடி

கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி நாடு மிகவும் ஆபத்தில் உள்ளது எனவும், வரும் 22-ஆம் தேதி மக்கள் யாரும் வெளியில் வர வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

சற்று நேரத்திற்கு முன்பு நாட்டு மக்களிடையே பேசிய பிரதமர் மோடி, 2-ம் உலக போர் கூட உலக நாடுகளுக்கு இவ்வளவு பாதிப்பை ஏற்படத்தவில்லை. ஒவ்வொரு இந்தியனும் கொரோனா குறித்து சரியான தகவல் பெற வேண்டியது அவசியம் என வலியுறுத்தினார்.

இதுகுறித்து அரசு எடுத்து வரும் முயற்சிகளுக்கு மக்களின் ஆதரவு அமோகமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். உலகில் எந்த நாடும் இதுவரை கொரோனாவுக்கு மருந்தோ, தடுப்பூசியோ கண்டுபிடிக்கவில்லை, இதனால் கொரோனாவை தடுக்க புதுவிதமான யுக்தி கையாளப்படுவதாக கூறினார். அது மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டது மட்டுமே என்றும் தெரிவித்தார்.

130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியா போன்ற மிகப்பெரிய நாடுகளில் கொரோனாவை கட்டுப்படுத்துவது அவ்வளவு சாதாரணமான விஷயம் இல்லை என்று கூறிய அவர், இதனை கட்டுப்படுத்த நாம் மிக முக்கியமான 2 விஷயங்களை பின்பற்ற வேண்டும் என தெரிவித்தார்.

முதலாவது தீர்மானம், அடுத்து கட்டுப்பாடு ஆகிய 2 முக்கிய அம்சங்களை நாம் பின்பற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். இன்று வைரஸ் தொற்றிலிருந்து நம்மை காப்பாற்றிக் கொள்வதற்கான தீர்மானத்தை எடுக்க வேண்டும். நாம் ஆரோக்கியமாக இருந்தால் தான் உலகமும் ஆரோக்கியமாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்த்து விட்டு வீடுகளில் இருக்க வேண்டும், சமூகத்திலிருந்து விலகி இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வெளியில் சுதந்திரமாக சுற்றுவது நமக்கும் நம்மை சார்ந்தவர்களுக்கும் ஆபத்தாக அமையும் என்றும் மோடி தெரிவித்தார்.

எனவே வரும் வாரங்களில் மக்கள் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். முடிந்த வரை வேலையையும் வர்த்தகத்தையும் வீட்டில் இருந்தபடியே பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும், 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்றும் கூறினார்.

எனவே மார்ச் 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை அனைவரும் “மக்கள் ஊரடங்கை” கடைபிடிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தார். அத்தியாவசிய வேலைகள் செய்பவர்களுக்கு மட்டும் அதில் விதிவிலக்கு அளிக்கலாம் எனவும் தெரிவித்தார்.

இந்த ஊரடங்கு உத்தரவு வரும் காலத்தில் பல பிரச்சினைகளை சமாளிக்க உதவும் என தெரிவித்த மோடி, மாநில அரசுகள் இதுகுறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

கொரோனா வைரசால் இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக மோடி தெரிவித்தார். இந்தியா தனது பிரமாண்ட என பலத்துடன் முன்னேற வேண்டும் என்பதே எனது விருப்பம் என பிரதமர் மோடி மக்களிடம் உரையாற்றினார்.

What do you think?

-1 points
Upvote Downvote

வங்கிக்கடன் தவணைகளை ஒத்திவைக்க ராமதாஸ் வலியுறுத்தல்!

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்களுக்கு தடை!