தீனதயாள் உபாத்யாய சிலையை திறந்து வைத்தார் மோடி

வாரணாசியில் தீனதயாள் உபாத்யாய சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.

உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியாகும். பிப்-16-ஆம் தேதி வாரணாசிக்கு சென்று பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குவார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்திருந்தது. அதேபோல், பிரதமர் மோடி இன்று காலை வாரணாசி சென்றார், அவரை முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான அதிகாரிகள் அவரை வரவேற்றனர்.

அதனைத்தொடர்ந்து, வாரணாசியில் அமைக்கப்பட்டுள்ள பண்டிட் தீனதயாள உபாத்யாயா நினைவு மண்டபத்தை பிரதமர் மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார். மேலும், அங்கு நிறுவப்பட்டுள்ள பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் 63 அடி உயர பஞ்ச லோக சிலையை திறந்து வைத்து, அதனை வணங்கி மரியாதை செலுத்தினார்.

What do you think?

சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு – 5 பேர் போக்சோவில் கைது

உலகக் கோப்பை கிரிக்கெட் தூதராக சிவகார்த்திகேயன் நியமனம்