பிரதமர் மோடி வாயால் வடை சுடுகிறாரா..?
தமிழகம் வந்து வாயால் வடை சுடும் பிரதமர் மோடியை மக்கள் ஏற்க மாட்டார்கள் என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
தென்காசி புதிய பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் 11 புதிய பேருந்துகளை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் மிக்ஜாம் புயல் ஏற்பட்ட பொழுது வராத மோடி, தேர்தலுக்காக மட்டும் தமிழகம் வந்து வாயால் வடை சுடுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள் என தெரிவித்தார்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.