அக்டோபர் மாதம் தொடங்கிய வடகிழக்கு பருவமழை தற்போது தான் இயல்பு நிலையை அடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
கடந்த அக்டோபர் மதம் தொடங்கிய பருவமழை தமிழகம் மற்றும் புதுவையில் பரவலாக பெய்து வந்தது இருப்பினும் காற்றழுத்த தாழ்வு பகுதிகள் வலுவிழந்து போனதால் பனிப்பொழிவு ஏற்பட்டது அதனால் பருவமழையின் தீவிரம் குறைந்தது. ஆகையால் இயல்பை பருவமழையின் அளவும் சற்று குறைந்திருந்தது. இந்நிலையில் கடந்த வாரம் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று புயலாக மாறியது அதற்கு மாண்டஸ் புயல் பெயர்சூட்டப்பட்டது இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் மிக கனமழை பெய்தது. புயல் கடந்த பின்னும் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் 3 நாட்களுக்கு மழை தொடரும் என்றும் அறிவிக்கப்ட்டுள்ள நிலையில், மாண்டஸ் புயலின் காரணமாக பருவமழை அதன் இயல்பு நிலையை அடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,அக்டோபர் 1ம் தேதி முதல் இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பு அளவை எட்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார். இதுவரை பருவமழையின் அளவு 401 மிமீ அளவு பெய்துள்ளதாகவும். பருவமழையின் பற்றாக்குறையை மாண்டஸ் புயல் ஈடு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.