பருவமழை முன்னெச்சரிக்கை பணி ..!! துணை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை..!!
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் துணை முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது..
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்பேரில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகள் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் வடகிழக்குப் பருவமழையின் போது இடர்களைத் தவிர்ப்பதற்காக நடைபெற்று வரும் முன்னெச்சரிக்கைப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டத்தைத் தலைமைச்செயலகம் – நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது..
அப்போது பொதுமக்களின் கோரிக்கைகள் – சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களின் அடிப்படையில், மாநகராட்சி மண்டலங்கள் மற்றும் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள Monitoring Officers, Micro Level-ல் செயல்படுத்தப்பட்டு வரும் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைகளை குறித்து விளக்கப்பட்டது..
நகராட்சி நிர்வாகத்துறை – நெடுஞ்சாலைத்துறை – மின்துறை – மருத்துவம் & மக்கள் நல்வாழ்வுத்துறை – பால்வளத்துறை போன்ற துறைகள் சார்ந்து மேற்கொள்ளப்படுகிற பணிகள் குறித்தும் இக்கூட்டத்தில் அரசு உயர் அதிகாரிகள் கருத்துக்களை முன் வைத்தனர்.
வடகிழக்குப் பருவமழை நெருங்குவதால், வெள்ளத்தடுப்பு – மீட்பு நடவடிக்கைக்கான தயார்நிலை உள்ளிட்ட அனைத்துப்பணிகளையும் விரைந்து நிறைவு செய்திட வேண்டுமென ஆலோசனைகள் வழங்கப்பட்டது..
இதில் நகர்புறம் மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் கே.என்.நேரு., மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிமணியன்., இந்து சமய நிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு., மற்றும் தா.மோ.அன்பரசன்., செந்தில் பாலாஜி., ஆவடி நாசர் உட்பட இலக்கா அமைச்சர்கள்., மற்றும் மேயர் பிரியா பங்கேற்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..