புதுக்கோட்டை-தமிழ் ஆட்சி மொழி வார விழா விழிப்புணர்வு பேரணி!!!
புதுக்கோட்டை மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆட்சி மொழி வார விழா விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
புதுக்கோட்டை மாவட்டம் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் தமிழ் ஆட்சி மொழி வார விழாவை முன்னிட்டு நடைபெற்ற இப்பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
இதில் சிலம்பம் கலைஞர்கள் சிலம்பம் சுற்றியும், கரகம் நடனமாடியும் நாட்டுப்புற கலைஞர்கள் பாடல்கள் பாடியவாறு கலந்து கொண்டு பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
இந்த பேரணியில், தமிழில் கையொப்பம் போட வேண்டும், தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும், தமிழில் ஐந்து மடங்கிலும் ஆங்கிலத்தில் மூன்று மடங்கிலும் பிற மொழியில் இரண்டு மடங்கிலும் தேவைக்கேற்ப பெயர் பலகை வைக்க வேண்டும் உள்ளிட்ட விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்திய படி கல்லூரி மாணவ, மாணவியர்கள் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.